சுப்மன் கில் அரைசதம்: கோல்கட்டா வெற்றி| Dinamalar

சுப்மன் கில் அரைசதம்: கோல்கட்டா வெற்றி

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020
Share
அபுதாபி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக முகமது நபி, விரிதிமன் சகா, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் நிகில் நாயக், சந்தீப் வாரியர் நீக்கப்பட்டு வருண், கமலேஷ் நாகர்கோட்டி

அபுதாபி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின.



latest tamil news


ஐதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக முகமது நபி, விரிதிமன் சகா, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் நிகில் நாயக், சந்தீப் வாரியர் நீக்கப்பட்டு வருண், கமலேஷ் நாகர்கோட்டி தேர்வாகினர்.'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு மணிஷ் பாண்டே (51), கேப்டன் வார்னர் (31), விரிதிமன் சகா (30) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.


latest tamil news



எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (70*), இயான் மார்கன் (42*) கைகொடுக்க, 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X