ஒரு வாசகர், எழுத்தாளரான கதை !

Updated : செப் 27, 2020 | Added : செப் 26, 2020
Share
Advertisement
இன்றைய சூழலில் மகத்தான எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் திரும்ப, திரும்ப நினைவு படுத்த வேண்டியது அவசியமானது. காரணம், எத்தனையோ எழுத்தாளர்கள், தமிழ் இலக்கியங்களில், கலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.ஒவ்வொருவரின் படைப்பு களிலும், மொழியைப் பயன்படுத்துவதும், கதை சொல்லும் விதமும் மாறுபட்டு இருக்கும். தலைசிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், வாசகர்களை எளிதில்
ஒரு வாசகர், எழுத்தாளரான கதை !

இன்றைய சூழலில் மகத்தான எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் திரும்ப, திரும்ப நினைவு படுத்த வேண்டியது அவசியமானது. காரணம், எத்தனையோ எழுத்தாளர்கள், தமிழ் இலக்கியங்களில், கலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
ஒவ்வொருவரின் படைப்பு களிலும், மொழியைப் பயன்படுத்துவதும், கதை சொல்லும் விதமும் மாறுபட்டு இருக்கும். தலைசிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், வாசகர்களை எளிதில் சென்றடையும் வகையில் இருக்கும். அவ்வகையில், ஒரு வாசகனே, எழுத்தாளராக மாறி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
திருப்பூர் அடுத்த பாண்டியன் நகரைச் சேர்ந்த, 78 வயது நெசவு தொழிலாளி ஜெயபாலன், 'எனது முகவரி', 'மெய்ப்படும் உணர்வுகள்' என கவிதை நுால்களை வெளியிட்டு, அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அவரிடம் பேசியதிலிருந்து...எனது வாழ்நாளின் பெரும்பகுதி, நெசவு, கட்டட மேற்பார்வையாளர், தியேட்டர் ஆபரேட்டர் என பணிகளில் முடிந்தது. 50 வயதை கடந்தபோது, குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை, 10 குறும்படங்களில் நடித்துள்ளேன்.அன்று என்னுடன் இருந்த பலர், சினிமாவில் டைரக்டர்களாக உள்ளனர். அதனால், சினிமாவிலும் சில காட்சிகளில் நடிக்கும் தருணம் ஏற்பட்டது. ஆனால், வாசிப்பு மட்டுமே எனது மூச்சாக இருந்தது. இதனால், கவிதை, திரைவிமர்சனம் எழுதுவதில் ஆர்வம் காட்டினேன். மதுராந்தகன் என்ற புனைப்பெயரில் பல புத்தகங்களை எழுதி வருகிறேன். படித்த விஷயங்களை, அனைவரிடம் கொண்டு சேர்க்க முற்படுகிறேன், என்று முடித்த அந்த தன்னம்பிக்கை எழுத்தாளரை வாழ்த்து கூறவும், மழை துளிக்கவும் சரியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X