மாணவியருக்கு நிதி உதவி: நிதிஷ் உறுதி | Dinamalar

இந்தியா

மாணவியருக்கு நிதி உதவி: நிதிஷ் உறுதி

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (3)
Share
பாட்னா : ''சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்த பின், பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவியருக்கு, 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடிக்கும் மாணவியருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்,'' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் வாக்குறுதியளித்துள்ளார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாணவியருக்கு நிதி உதவி: நிதிஷ் உறுதி

பாட்னா : ''சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்த பின், பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவியருக்கு, 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடிக்கும் மாணவியருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்,'' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் வாக்குறுதியளித்துள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டசபை தேர்தல், மூன்று கட்டமாக நடக்க உள்ளது.
இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார், ஏழு அம்ச தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள
வாக்குறுதிகள்:
* பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவியருக்கு, 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடிக்கும் மாணவியருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்
* மாநிலத்தில் அனைத்து விவசாய நிலங்களுக்கும், நீர்ப்பாசன வசதி செய்து தரப்படும்
* மக்கள் அனைவருக்கு அரசு வேலை அளிப்பது முடியாத காரியம். எனினும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் வேலைவாய்ப்புத் திறன் மையங்கள் அமைக்கப்படும்
* அனைத்துக் கிராமங்களிலும், சூரிய மின்சக்தி தெரு விளக்குகள் வசதி ஏற்படுத்தப்படும். கிராமப் புறங்களில் கழிவு மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும்
* அனைத்து மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில், புயல் நீர் வடிகால் அமைப்பு உருவாக்கப்படும்
* முதியவர்களுக்கு காப்பகங்களும், நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகளும் அமைத்துத் தரப்படும்
* கிராமப் பகுதிகளில் அதிக அளவில், சுகாதார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு, வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news





கொரோனா பரவல் முடிந்துவிட்டதா?



பீஹாரில் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது பற்றி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவூத் கூறியதாவது:பீஹார் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால், கொரோனா
பரவல் உள்ள நிலையில், தேர்தல் நடத்துவது சரியா என்பது தான், என் கேள்வி. கொரோனா பரவல் முடிந்துவிட்டதா என, மத்திய அரசும், பீஹார் அரசும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X