வேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (3)
Share
லக்னோ : உ.பி.,யில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் (anti-farmer) என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். விவசாயிகளுக்காக மத்திய அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உ.பி., பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் விவசாய

லக்னோ : உ.பி.,யில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் (anti-farmer) என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.



latest tamil news



விவசாயிகளுக்காக மத்திய அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உ.பி., பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் விவசாய மசோதாக்களை எதிர்ப்பவர் விவசாயி களுக்கு எதிரானவர்கள் (anti-farmer) மற்றும் இந்த சட்டம் விவசாயிகளை இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விடுவித்து, அவர்களது விருப்பப்படி அவர்களின் விளைபொருட்களை விற்க ஒரு வாய்ப்பை வழங்கும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,26) தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் கூறுகையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் உ.பி., மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் உறுதியளித்திருந்தார். இந்த நோக்கத்தை மனதில் கொண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. விவசாயிகளுக்கான திட்டங்களை எதிர்ப்பவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை, விவசாயிகளை சுரண்டியவர்கள், புலம் பெயர்ந்தோரை கேலி செய்தவர்கள், கரும்பு எதில் விளைகிறது என எதுவும் தெரியாத இதுபோன்ற நபர்கள் பலர் தான், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களாக நடித்து போராட்டம் நடத்துகின்றனர்.


latest tamil news



மேலும் கொரோனா பாதிப்பு காலங்களில் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மாநில அரசு 12 முறை இலவச உணவு தானியங்களை விநியோகித்துள்ளது. யாரும் பசியை எதிர்கொள்ளவில்லை. கொரோனா சவாலின் போது உலகம் எங்கள் நிர்வாகத்தை பாராட்டுகிறது. மேலும் அரசு 40 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இலவச உணவு (ரேஷன்) வழங்கியது, உத்தரபிரதேசத்தில் எட்டு சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல்கள் விரைவில் நடைபெறும். இவ்வாறு கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X