உக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கீவ்:உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் பலியாகினர். விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர்.

கீவ்:உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் பலியாகினர். விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர்.



latest tamil news



புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரை இறக்க முடிவு செய்தார்.அதன்படி ராணுவ விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க அவர் முயற்சித்தார்.ஆனால் அதற்குள் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோரம் உள்ள புதரில் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது.


latest tamil news



இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானப்படை வீரர்கள் 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த கார்கிவ் பிராந்தியத்துக்கு இன்று அவர் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
27-செப்-202010:17:46 IST Report Abuse
Perumal Russian technology is robust and superior to any other technology.Murugavel may note this.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-செப்-202006:15:58 IST Report Abuse
 Muruga Vel சீன ரஷ்ய விமானங்களின் தரம் பிரான்ஸ் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X