பொது செய்தி

தமிழ்நாடு

7 நாள் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வசூல்: கொரோனா நோயாளிகள் அலறல்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிகிச்சை,வசூல்,  கொரோனாநோயாளிகள், அலறல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்காக, மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில், படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளும் தேர்வு செய்யப்பட்டு, அங்கும், படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிபன், டீ, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரை, சுண்டல், பாசிப்பருப்பு, சத்தான உணவு வகைகள் தினமும் அளிக்கப்படுகின்றன. மேலும், மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்களுக்கு, ஆக்சிஜன், வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக, அரசு செலவு செய்து வருகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும், கொரோனா நோயாளிகளிடம், ஏழு நாட்களுக்கு, 3.50 லட்சம் முதல், நான்கு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.அவ்வாறு செலுத்திய முழுத்தொகைக்கும் ரசீது தருவதில்லை. மாறாக, 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய்க்கே ரசீது வழங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.


latest tamil news




கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, குறிப்பிட்ட தொகை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை காற்றில் பறக்கவிட்ட சில தனியார் மருத்துவமனைகளில், அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வது, பலரையும் அலற வைத்துள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. சிகிச்சைக்கு, குறிப்பிட்ட கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீறி, பல இடங்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்த மருத்துவமனைகள் மீது, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும், இதுபோன்ற தவறுகள் நடக்குமானால், மக்கள் நல்வாழ்வுத்துறையின் விதிமுறைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
27-செப்-202018:47:19 IST Report Abuse
Unmai vilambi அறிக்கை மட்டுமே வரும் எந்த நடவடிக்கையும் இருக்காது .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-செப்-202016:53:56 IST Report Abuse
Endrum Indian 22 நாள் கொரோன சிகிச்சைக்கு ரூ 16 லட்சம் அது இது என்று சொல்லி அதே நிலையில் தான் இதுவும் இருக்கின்றது
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-செப்-202012:09:37 IST Report Abuse
J.Isaac கல்வியும் மருத்துவமும் இந்தியாவில் பொன் முட்டையிடும் வாத்து. சேவை கொடுக்க அல்ல . வியாபாரம்
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
27-செப்-202018:30:46 IST Report Abuse
NicoleThomsonஉண்மையில் இவை இரண்டும் மட்டும்தான் இலவசமாக கொடுக்கப்படவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X