பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020
Share
Advertisement
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

திங்கள் முதல் ஞாயிறு வரை (28.9.2020 - 4.10.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்சந்திரன், புதன், சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
அசுவினி: செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். எதிரியாக நினைத்த ஒருவர் உங்கள் நட்பை நாடி வருவார். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்.
பரணி: அக்கம் பக்கத்தினர் உதவுவர். வியாபாரத்தை பெருக்குவீர்கள். மேலதிகாரி உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். முயற்சிகள் பலிதமாகும். செலவுகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: தம்பதி இடையே நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்


ரிஷபம்

\


latest tamil newsசூரியன், புதன், சந்திரனால் நற்பலன் உண்டு. மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
கார்த்திகை 2,3,4:. புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலை வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். யதார்த்தங்களை புரிந்து கொள்வீர்கள்.
ரோகிணி: தம்பதி இடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை மேம்படும். சில பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பாக்கிகள் வசூலாகும். மேலதிகாரி ஆதரிப்பார்.
மிருகசீரிடம் 1,2: வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொது நலச் செயல்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று கிடைக்கும்.


மிதுனம்ராகு, புதன், குரு நன்மைகளை வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
மிருகசீரிடம் 3,4: கடந்த வாரம் வாட்டிய பிரச்னைகயிலிருந்து விடுபடுவீர்கள். திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.
திருவாதிரை: சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். மற்றவர்களின் பேச்சுக்கு ஓரளவுக்கு மேல் மதிப்பளிக்க வேண்டாம். கனவுகள் நனவாக இன்னும் சற்று முயற்சி தேவை.
புனர்பூசம் 1,2,3: பொதுநல விவகாரங்களில் தலையிட வேண்டாம்.. புதிய அனுபவப் பாடம் பெறுவீர்கள். பிறருக்கு உதவி செய்தாலும் அவப்பெயர் கிடைக்கக்கூடும். நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
சந்திராஷ்டமம் : 28.9.2020 காலை 6:00 - மதியம் 12:41 மணி


கடகம்ராகு, சுக்கிரன், புதன் அனுகூல பலன்கள் அளிப்பர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
புனர்பூசம் 4: வார ஆரம்பத்தில் உடல் நலனில் கவனம் தேவை. பிறரின் நலனுக்காக பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த நற்பெயர் கிடைப்பது சந்தேகமே. சில நண்பர்களை நம்ப வேண்டாம் என்பதை உணர்வீர்கள்.
பூசம்: அதிகம் உணர்ச்சி வசப்படுவீர்கள். பிரியமானவர்களின் அன்பை பெறுவதில் சிரமங்கள் இருக்கும். பணியாளர்கள் நிதானத்துடன் பேச வேண்டும். பயணங்கள் செல்லும் திட்டங்களில் தடைகள் ஏற்படும்.
ஆயில்யம்: எதிலும் நிதானம் தேவை. பண வரவு சுமாராக இருக்கும். அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பதில் சிக்கல் இருக்கக்கூடும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள்.

சந்திராஷ்டமம் : 28.9.2020 மதியம் 12:42 - 30.9.2020 இரவு 10:16 மணி


சிம்மம்குரு, செவ்வாய், சந்திரன் நன்மைகளை அள்ளி வழங்குவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.
மகம்: பழைய பிரச்னைகளில் ஒன்று தலைதுாக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்கள் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்.
பூரம்: வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஒருவர் தாய்மை அடைந்த இனிக்கும் செய்தி உண்டு.
உத்திரம் 1: வார மத்தியில் சற்று கவனமாக இருங்கள். வாரக் கடைசியில் மன நிறைவு, மகிழ்ச்சி நிலவும். சகோதரரால் செலவுகள் இருக்கும். புதிய மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

சந்திராஷ்டமம் : 30.9.2020 இரவு 10:17 - 3.10.2020 காலை 9:36 மணி


கன்னிசுக்கிரன், புதன், குருவால் நற்பலன் உண்டு. முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
உத்திரம் 2,3,4: வார ஆரம்பத்தில் இனிய நிகழ்வுகள் உண்டு. வாரக் கடைசியில் பிறரை விமர்சிக்க வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களைக் கிளறி விவாதிக்காதீர்கள். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள்.
அஸ்தம்: சக பணியாளர்களிடம் பொறுமையாக இருங்கள். கடன் தரவோ, வாங்கவோ வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் வாரம்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் நல்ல வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பணியாளர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தெய்வ விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 3.10.2020 காலை 9:37 மணி - 4.10.2020 நாள் முழுவதும்


துலாம்சுக்கிரன், சந்திரன், புதன் நிறைய நன்மைகளை வழங்குவர். ராமர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
சித்திரை 3,4: பண வரவு உண்டு. மகனுக்கு/ மகளுக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். கடனை அடைப்பீர்கள். பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும்.
சுவாதி: முன்பு படித்த இடத்திலிருந்து சான்றிதழ்கள் கைக்கு வரும். நண்பர்களோடு அதிக நெருக்கம் வேண்டாம். பங்குதாரர்களை வீணாக சந்தேகிக்க வேண்டாம். வெளிநாட்டு யோகம் வரும்.
விசாகம் 1,2,3: உறவுகளிடையே இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலைகள் நீங்கும். சொத்து விஷயங்கள் நல்ல படியாக முடிவுக்கு வரும். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


விருச்சிகம்குரு, சுக்கிரன், சூரியன், சந்திரன் சாதகமான பலனை தருவர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
விசாகம் 4: முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முயற்சியில் வெற்றி கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வவீர்கள்.
அனுஷம்: இனிய செய்தி வரும். திட்டமிட்ட செயல்களை முடிப்பீர்கள். யாருடனும் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் நகை வாங்குவீர்கள்.
கேட்டை: சுபநிகழ்ச்சிகளுக்கு தயாராவீர்கள். விண்ணப்பித்த வங்கிக் கடன் கிடைக்கும். மூத்தோர் ஆசி உண்டு. பாக்கி வைத்திருந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.


தனுசுசெவ்வாய், புதன், சந்திரன் நன்மை செய்யக் காத்திருக்கின்றனர். கிருஷ்ணர் வழிபாடு மகிழ்ச்சி தரும்.
மூலம்: நண்பர்கள் உங்களின் செல்வாக்கைப் பரப்புவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.
பூராடம்: வீடு கட்ட எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வரும். கல்வி வகையில் செலவுகள் உண்டாகும். நடக்காது என்று நினைத்த விஷயங்கள் கூடி வரும்.
உத்திராடம் 1: தம்பதி இடையே இருந்த மனப்போர் நீங்கும். இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். மேலதிகாரி கருணையுடன் நடந்துகொள்வார்.


மகரம்ராகு, கேது, சந்திரன் அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தருவர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
உத்திராடம் 2,3,4: உங்களது பலம், பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நண்பர்கள் தேடி வருவார்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வரும். கலைத் திறமைகள் வெளிப்படும்.
திருவோணம்: பணியாளர்களின் கவனச் சிதறல் குறையும். குடும்பத்தினர் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பர். இளம் வயதினரின் முயற்சிகள் வெற்றி பெறும். கோபத்தைக் குறையுங்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசாங்க அனுகூலம் உண்டு. வழக்கில் மகிழ்ச்சியான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் உள்ளோர் அறிமுகமாவர்.


கும்பம்குரு, செவ்வாய், புதன் சாதகமான அமர்வில் உள்ளனர். பெருமாள் வழிபாடு வளம் தரும்.
அவிட்டம் 3,4: முனைப்புடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் அன்பு கிடைக்கும். உடல் சோர்வு வந்து நீங்கும். கடனை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.
சதயம்: கையில் பணம் புரளும். புதிய வேலையில் சேருவீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் நல்லுறவு மலரும். தந்தையிடமிருந்து உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் நெருக்கடிகள் நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சுயமாக தொழிலை தொடங்குவீர்கள். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.


மீனம்சுக்கிரன், புதன், சந்திரன் கூடுதல் நற்பலன்களை அளிப்பர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

பூரட்டாதி 4: கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த நண்பர்கள் இணைவீர்கள். மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். முயற்சியில் வெற்றி கிடைக்கும் உடன்பிறப்புகள் உதவி செய்வர். வியாபார எதிரிகள் விலகுவர்.
உத்திரட்டாதி: குழப்பம் நீங்கி தெளிவடைவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் வரும். கணவர் உங்களை புரிந்து கொண்டு பாசம் காட்டுவார். அரசாங்க வேலைகள் அனுகூலமாக முடியும்.
ரேவதி: பணியாளர்களுக்குச் சாதகமான நிலை இருக்கும். காதலர்களுக்கு நன்மை வரும். வாரக் கடைசியில் எதிர்பார்த்த வங்கி கடன் அனுமதி கிடைக்கும்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X