பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழியும் கோவை மருத்துவமனைகள்: ஐ.சி.யூ., அட்மிஷனுக்கு காத்துக் கிடக்கும் நோயாளிகள்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவைமருத்துவமனை, ஐ.சி.யூ., அட்மிஷன்,நோயாளிகள் , கொரோனா, கோவிட்19

கோவை: கொரோனா உச்சத்தில் இருப்பதால், கோவை மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யூ.,) வசதிகளை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறப்பு கவனம் செலுத்தாவிடில், இறப்பு விகிதம் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவையில், 30 தனியார் மருத்துவனைகள், ஐந்து அரசு மருத்துவமனைகள், எட்டு அரசு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லுாரிகள், ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள் என, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவசர சிகிச்சைக்கான ஐ.சி.யூ., பிரிவில், படுக்கை பற்றாக்குறை தொடர்கிறது.கோவையை பொறுத்தவரை, அரசு மருத்துவமனையில் 152, தனியார் மருத்துவமனையில் 204 என, மொத்தம், 356 ஐ.சி.யூ.. படுக்கை வசதிகளே உள்ளன. இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனை, பி.எஸ்.ஜி., ராயல் கேர், கே.எம்.சி.எச்., ராமகிருஷ்ணா என முக்கிய மருத்துவமனைகளில் ஒரு இடம் கூட காலியில்லை. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


சிக்கலில் ஆக்சிஜன் சப்ளைகோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 2 கே.எல்., திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர், கடந்த ஜூலை வரை முழுமையாக பயன்படுத்தப்படுத்தவேண்டிய அவசியம் எழவில்லை. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, ஐ.சி.யூ., படுக்கைகள் முழுவதும் நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையிலும், ஆக்சிஜன் சப்ளையில் சில சிக்கல்கள் தொடர்கின்றன.கொரோனா சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும் நிலையில், நடுத்தர, கீழ்தட்டு மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ள நிலையில், இப்போக்கு விரைவில் பெரும் அபாயத்தை உருவாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கான அறிவிப்புகளும் வந்தவண்ணம் உள்ள சூழலில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.


latest tamil news

ஒரு வாரத்தில் ஆக்சிஜன் 'ரெடி'இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:ஆராய்ச்சிகளின் படி, வென்டிலேட்டர் தேவைப்படும் நிலைக்கு செல்பவர்களின் இறப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. இயற்கையாக சுவாசம் செய்ய முடியாதவர்கள், வென்டிலேட்டர் பொருத்த, மயக்க நிலைக்கு கொண்டு செல்லவேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இத்தேவை எழுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. பல்வேறு உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கே வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தவேண்டிய அவசியம். கடந்த ஜூலை வரை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 2 கே.எல்., திறன் கொண்ட திரவ ஆக்சிஜன் இருப்பு இருந்தது. இது தேவைக்கு அதிகமாகவே இருந்தது. தற்போது, 11 கே.எல்., திறன் கொண்ட திரவ ஆக்சிஜன் இருப்புக்கான கூடுதல் வசதி ஏற்படுத்த அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் ஆக்சிஜன் வசதி முழுமையாக இருக்கும் என்பதால், ஐ.சி.யூ பிரிவில் கூடுதலான நபர்களை சேர்க்க இயலும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஐ.சி.யூ., அதிகரிப்பது சிரமம்பி.எஸ்.ஜி., மருத்துவமனை கொரோனா ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முரளி கூறுகையில், ''தற்சமயம், 450 படுக்கைகள் கொரோனா பிரிவுக்கு ஒதுக்கியுள்ளோம். ஐ.சி.யூ., பிரிவுக்கு, 45 படுக்கை வசதிகள் உள்ளன. பெரும்பாலும் ஐ.சி.யூ., காலியிடம் இருப்பதில்லை. ஐ.சி.யூ., பிரிவுக்கு தனி சிறப்பு வசதிகள் அவசியம் இருப்பதால், மேற்கொண்டு அதிகரிப்பது என்பது சிரமம்,'' என்றார்.

குப்புசாமி நாயுடு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பாலவினோத் கூறுகையில், ''கொரோனா பாதிப்புக்கு ஐ.சி.யூ., பிரிவில் சில பிரத்யேக வசதிகள் தேவை. அவ்வசதிகள்உள்ள படுக்கைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தேவை உள்ளவர்களை அறைகளில் வைத்தே பராமரிக்கவும் செய்கின்றோம். தற்போது, ஒதுக்கப்பட்ட, ஐ.சி. யூ.,வில் படுக்கை காலியிடம் இல்லை,'' என்றார்.


'ஐ.சி.யூ., அதிகரிக்க அறிவுரை'கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கொரோனா பாதிக்கும் அனைவரையும் ஐ.சி.யூ., பிரிவில் அனுமதிக்கவேண்டிய அவசியமில்லை. கொரோனா பாதிக்கப்படுபவர்களுக்கு, சர்க்கரை, ரத்த அழுத்தம், புற்றுநோய், உடல் பருமன் இருந்தால் தான் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கும் நிலை ஏற்படுகிறது. வென்டிலேட்டர் தேவைப்படுவோர் எண்ணிக்கை மிகக் குறைவே.இ.எஸ்.ஐ., - அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இ.எஸ்.ஐ., புதிய விடுதியில், ஆக்சிஜன் சப்ளை வசதியுடன் 120 படுக்கை, மற்றொரு கட்டடத்தில் 80 படுக்கை வசதிகள் என ஐ.சி.யூ., பிரிவுக்கான வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளிலும் ஐ.சி.யூ., படுக்கை வசதி அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


15 சதவீதம் பேருக்கு செயற்கை சுவாசம்*உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரங்களின் படி, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில், 15 சதவீதம் பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது.

*'இந்தியா இண்டஸ்ட்ரியல் காஸ்' உற்பத்தியாளர் அமைப்பின் புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஏப்., மாதம் இந்தியா முழுவதும், 750 டன் ஆக்சிஜன் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டன. தற்போது, 2,800 டன் என்ற அளவில் ஆக்சிஜன் தேவையுள்ளது.

*ஒரு லிட்டர் திரவ ஆக்சிஜன் மூலம், 860 லிட்டர் ஆக்சிஜன் வாயு கிடைக்கும். 1 கே.எல்., சிலிண்டர் மூலம் 8 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் வாயு கிடைக்கும். ஒரு நிமிடத்துக்கு, 40 முதல் 50 லிட்டர் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
27-செப்-202019:17:46 IST Report Abuse
தமிழ்வேள் கோயமுத்தூர் ஆட்களுக்கு கொஞ்சம் பந்தா கூட . அனைத்து கோவை ஆஸ்பத்திரிகளும் காசு பிடுங்கும் வகையை சேர்ந்தvaiye ...ஐசியு வில் அட்மிட் ஆவதுதான் பெருமை போல ..
Rate this:
Cancel
27-செப்-202018:23:42 IST Report Abuse
ராசு இது உண்மை. இரு வாரங்களுக்கு முன்பு எனது தந்தைக்கு உடல் நிலை மிகவும் பாதிப்பு அடைந்தது. கோவையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் அட்மிட் செய்ய முயற்சி செய்தோம் ஆனால் எந்த icu வில்லும் bed இல்லை ventilator இல்லை என்று கூறிவிட்டார்கள். எனது தந்தையின் உயிர் ambulance லேயே பிரிந்தது. மிகவும் கொடூரமான தருணம் என் வாழ்வில்..
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-செப்-202016:56:48 IST Report Abuse
S. Narayanan ஊழலுக்கான விதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X