தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ஹர்சிம்ரத் கவுர்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை என அமைச்சர் பதிவியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார்.மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு
Harsimrat, NDA, BJP, FarmBill, Protest, Deaf

புதுடில்லி: இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை என அமைச்சர் பதிவியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் கடந்த இரு வாரங்களுக்கு முன் விலகினார். வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்தது.


latest tamil news



இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹர்சிம்ரத் கவுர், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
மத்திய அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டை 3 கோடி பஞ்சாப் மக்களின் வலியும், போராட்டமும் தளர்த்துவதில் தோல்வி அடைந்துவிட்டாலே, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாதல் சாஹேப் சேர்ந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியாக நீண்டகாலத்துக்கு இருக்க முடியாது.
இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை, தேசத்துக்கு நீண்டகாலமாக உணவு அளித்துவரும் பஞ்சாப் மக்களின் நலனைப் பார்ப்பதில் பார்வை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
27-செப்-202020:51:51 IST Report Abuse
Nagarajan D உங்கள் கட்சியின் கொள்ளை கூட்டத்திற்கு கொள்கை என்ன? விவசாயிகள் நஷ்ட்டப்பட வேண்டும் உங்களை போன்ற தரகர்கள் செழிக்க வேண்டும் அப்படி தானே?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-செப்-202020:46:17 IST Report Abuse
sankaseshan Smaiah ,விவசாயின் நலத்தை இவர்கள் போராட வில்லை பாதல் குடும்பம் கொள்ளை அடிப்பது தடுக்க பட்டதால் குமுறுகிறார்கள் .CM அம்ரிந்தர் மசோதாவுக்கு ஆதரவு .அவர் தனி கட்சி தொடங்குவதாக வதந்தி பாதள் பிரச்னை யில் சிக்கினால் NDA ஆதரவு கிடைக்காது .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-செப்-202020:39:42 IST Report Abuse
Ramesh Sargam செவித்திறன் இல்லாத கூட்டணியில் இவ்வளவு நாட்கள் ஏன் அங்கம் வகித்தீர்கள்? எங்கோ உதைக்குதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X