பொது செய்தி

இந்தியா

எல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள இந்திய ராணுவம்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
டெம்சாக் : லடாக்கில் சீன எல்லையில் கடந்த 5 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் 14,500 அடி உயரத்தில் லடாக்கின் கிழக்குப்பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், டாங்கிகள், பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. மேலும், எல்லையை ஒட்டிய பகுதியில் முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியில் இந்திய வீரர்கள்
IndianArmy, China, winters, EasternLadakh,

டெம்சாக் : லடாக்கில் சீன எல்லையில் கடந்த 5 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் 14,500 அடி உயரத்தில் லடாக்கின் கிழக்குப்பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், டாங்கிகள், பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. மேலும், எல்லையை ஒட்டிய பகுதியில் முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியில் இந்திய வீரர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் , லடாக்கின் கிழக்கே உள்ள சுமர் - டெம்சோக் பகுதியில், ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு டி 90 மற்றும் டி 72 டாங்குகளுடன் பிஎம்பி-2 ரக பீரங்கிகளையும் நிறுத்தியுள்ளது. இந்த பீரங்கிகளை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் இயக்க முடியும்.

குளிர்காலத்தில், லடாக்கின் கிழக்கு பகுதியில் வெப்பநிலையானது மைனஸ் 35 டிகிரி வரை செல்வதுடன், அதிகளவு பனிக்காற்றும் வீசும். லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள இந்தூஸ் நதியில் பாயும் வெள்ளத்தை தாண்டியும், பல்வேறு தடைகளை மீறியும் இந்திய டாங்குகள், கொண்டு வரப்பட்டுள்ளன.இந்திய ஆயுதப்படைகள், இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை விரைவில் செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடந்த ஆக.,2 9- 30 தேதிகளில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறிய போது, இந்திய வீரர்கள் உடனடியாக அங்கு சென்றனர்


latest tamil news
இது தொடர்பாக ராணுவ மேஜர் ஜெனரல் அர்விந்த் கபூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: டாங்குகள், பீரங்கிகள் மற்றும் கனரக துப்பாக்கிகளை இந்த பகுதியில் பராமரிப்பது என்பது சவாலான விஷயம். வீரர்கள் மற்றும் ஆயுதங்களை தயாராக உள்ளதை உறுதி செய்ய, ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலம், லடாக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பது மறுக்க முடியாதது. இந்த சவலை சந்திக்கும் வகையில், ரேசன் பொருட்கள், எரிபொருள், உடைகள், டென்ட்கள் உள்ளிட்டவையுடன் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
27-செப்-202019:12:53 IST Report Abuse
K.ANBARASAN 1962 இந்திய சீனா போர் அக்டோபர் நொவெம்பரில் தான் நடை பெற்றுள்ளது.மிகவும் உஷாராக இருக்க வேண்டிய தருணம் அடுத்த மூன்று மாதங்கள் தான்.காரணம் சீனர்கள் குளிருக்கு வாழ பழக்கப்பட்டவர்கள். சீனாவில் எப்பொழுதுமே ஐந்து டிகிரி யிலிருந்து 15 டிகிரி வரை தான் வெப்பம் நிலவும்.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
27-செப்-202019:06:17 IST Report Abuse
K.ANBARASAN சப்பை மூக்கன் அக்டோபர் நொவெம்பரில் குளிர்காலத்தில் வேலையை காட்டுவான். ஆகையால் எல்லையில் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
27-செப்-202018:43:37 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) This is not the time to wage war because of the climate conditions. However our forces are VERY STRONG to repel the Chinese intruders
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X