மஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே| Dinamalar

மஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (8)
Share
மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 13.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.69 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் பெருமளவு வெளியே வரத் தொடங்கியதால்,
UddhavThackeray, Maharashtra, SecondWave, Fear, Covid-19, உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா, இரண்டாவது அலை, கொரோனா

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 13.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.69 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் பெருமளவு வெளியே வரத் தொடங்கியதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


latest tamil news



அவர் கூறியதாவது: மஹா.,வில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்தில் இதுபோன்ற நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல் மஹாராஷ்டிராவிலும் கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அரசின் உத்தரவை மீறி மக்கள் வெளியே செல்கின்றனர். மக்கள் அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X