பட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு: அரசியல் நோக்கமில்லை என விளக்கம்| Dinamalar

பட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு: அரசியல் நோக்கமில்லை என விளக்கம்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (7)
Share
மும்பை: சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்தித்ததில் எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும், அக்கட்சியுடன் கூட்டணி எதுவும் அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.சிவசேனா கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ. தலைவருமான தேவேந்திர
சிவசேனா, பாஜ, பா.ஜ., சஞ்சய்ராவத், தேவேந்திரபட்னாவிஸ், பட்னாவிஸ், Fadnavis, BJP, ShivSena, Devendra Fadnavis

மும்பை: சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்தித்ததில் எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும், அக்கட்சியுடன் கூட்டணி எதுவும் அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

சிவசேனா கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ. தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், நேற்று நான் பட்னாவிசை சந்தித்து சில விவகாரங்கள் குறித்து சந்தித்து பேசினேன். அவர் முன்னாள் முதல்வர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர். பீஹார் மாநில பா.ஜ.,வின் தேர்தல் பொறுப்பாளர். கொள்கை ரீதியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் எதிரிகள் இல்லை. எங்களது சந்திப்பு குறித்து முதல்வர் உத்தவிற்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்னாவிஸ் கூறுகையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி மீது மஹாராஷ்டிரா மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சொந்த பிரச்னைகள் காரணமாகவே அரசு கவிழ்ந்துவிடும். சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமில்லை. அந்த ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் சார்பில் பேட்டி தொடர்பாக சஞ்சய் ராவத்தை சந்தித்தேன். சஞ்சய் ராவத்துடனான சந்திப்பில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை. சாம்னாவில் பேட்டி அளிக்க வேண்டும் எனக்கூறினார். இதற்கு ஒப்பு கொண்ட நான், எனது பேட்டியை மாற்றம் செய்யாமல் அப்படியே இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X