தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (11)
Share
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை (செப்.,28) வீடு திரும்பவுள்ளதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 68. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு, பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை,
விஜயகாந்த், கொரோனா, டிஸ்சார்ஜ், நாளை, தேமுதிக, சுதீஷ்

இந்த செய்தியை கேட்க

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை (செப்.,28) வீடு திரும்பவுள்ளதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 68. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு, பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X