அறிவியல் ஆயிரம்
வாரத்துக்கு 238 முறை
அமெரிக்காவில் பெரும்பாலானோர் வாரத்துக்கு 238 முறை பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்படுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு சாலை, வணிக வளாகம், வீடு, அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளதே காரணம். இதில் அதிகபட்சமாக வாகனம் ஓட்டும் போது தான் அதிக முறை படம் பிடிக்கப்படுகிறது. காரணம் அங்கு 1.5 கி.மீ., துார இடைவெளியில் கேமராக்கள் உள்ளன. அதிக பாதுகாப்பு பகுதிக்குள் பணியாற்றுபவர்கள், பயணிப்பவர்கள் வாரத்துக்கு ஆயிரம் முறை கேமராவில் பதிவாகின்றனர்.
தகவல் சுரங்கம்
உலக ரேபிஸ் தினம்
ரேபிஸ் வைரசால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்., 28ல் உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1885ல் ரேபிஸ் வைரஸ்க்கு பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரது நினைவு தினம் உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் வைரசால் உயிரிழப்பே இருக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE