மேற்கு வங்கத்தில் அல்கொய்தா பயங்கரவாதி கைது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்கத்தில் அல்கொய்தா பயங்கரவாதி கைது

Added : செப் 27, 2020 | கருத்துகள் (2)
Share
கொல்கத்தா: பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்ததாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.,) செய்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தா அமைப்பை தொடர்பு கொண்டதற்காக, 9 பேர் கைது

கொல்கத்தா: பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்ததாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.,) செய்துள்ளனர்.



latest tamil news



கடந்த சில நாட்களுக்கு முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தா அமைப்பை தொடர்பு கொண்டதற்காக, 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 6 பேர் மேற்கு வங்கம், 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.


latest tamil news



அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அன்சாரியும் அவர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வேலைக்காக கேரளா சென்று தனது சொந்த ஊருக்கு திரும்பியவர் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X