குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் கிடையாது: முதல்வர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் கிடையாது: முதல்வர் அறிவிப்பு

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020
Share
காந்திநகர்: கொரோனா பரவல் காரணமாக குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் கிடையாது என முதல்வர் விஜயரூபானி அறிவித்துள்ளார்.ஆண்டு தோறும் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டும் அக்.,17 முதல் 25ம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படலாம் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி
navrathri festival, gujarat, cm, cancelled, corona, குஜராத் மாநிலம், கொரோனா, நவராத்திரி கொண்டாட்டம், கிடையாது

காந்திநகர்: கொரோனா பரவல் காரணமாக குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் கிடையாது என முதல்வர் விஜயரூபானி அறிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டும் அக்.,17 முதல் 25ம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படலாம் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி இந்தாண்டு நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் கிடையாது என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.


latest tamil news



மாநிலத்தில் நவராத்திரி விழாவின் போது ‛கர்பா' நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு கர்பா நடனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது பிரதமர் மோடி கலந்து கொண்டார். குஜராத் மாநிலத்தில் இதுவரை 1.3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 3,400 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X