பொது செய்தி

இந்தியா

உலக சுற்றுலா தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நடந்த ஷிகாரா படகுப் போட்டி

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020
Share
Advertisement
world tourism day, srinagar, dal lake, shikara boat race, உலக சுற்றலா தினம், ஸ்ரீநகர், தால் ஏரி, ஷிகாரா படகு போட்டி

ஸ்ரீநகர்: உலக சுற்றுலா தினத்தையொட்டி (செப்.,27) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா படகுப் போட்டி நடந்தது.

இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சுற்றுலாத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அங்குள்ள தால் ஏரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முக்கியமாக ஷிகாரா படகுப் போட்டி நடந்தது. மாநில சுற்றுலாத்துறை சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். இதுதவிர கேனோ பந்தயம், கயாக்கிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில சுற்றுலாத் துறை இயக்குனர் நிசாத் அஹமத் வானி, ‛ கொரோனா பரவலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சுற்றுலாவுக்கு தயாராகி விட்டது என்பதை அறிவிக்கவே இந்த ஷிகாரா போட்டி நடைபெறுகிறது. இந்தாண்டு நடந்த ஷிகாரா போட்டியில் 15 பேர் கலந்து கொண்டனர். வழக்கமாக சிறுவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X