எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவில் தவறான விஷயங்களை பரப்பாதீர்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவில் தவறான விஷயங்களை பரப்பாதீர்!'

Updated : செப் 29, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (15)
Share
சென்னை: 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவில், தவறான விஷயங்களை பரப்பாதீர்கள்' என, 'மவுனராகம்' முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பங்கேற்ற, முரளியின் மவுனராகம் இசை நிகழ்ச்சி, கொரோனாவால் பாதித்த நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்பட்டது. இதன், 100வது நாள் நிகழ்ச்சியை, டோக்கியோ தமிழ் சங்கம் நடத்த, எஸ்.பி.பி., நேரில் சென்று பாடினார்.
SPB, ripSPB, SP Balasubrahmanyam

சென்னை: 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவில், தவறான விஷயங்களை பரப்பாதீர்கள்' என, 'மவுனராகம்' முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பங்கேற்ற, முரளியின் மவுனராகம் இசை நிகழ்ச்சி, கொரோனாவால் பாதித்த நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்பட்டது. இதன், 100வது நாள் நிகழ்ச்சியை, டோக்கியோ தமிழ் சங்கம் நடத்த, எஸ்.பி.பி., நேரில் சென்று பாடினார். அதில் பங்கேற்றதால் தான், அவருக்கு கொரோனா தொற்று வந்தது என, சிலர் கூறியதை முரளி மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக, முரளி வெளியிட்ட வீடியோ பதிவு:பாலு சார் இல்லையென்பதை, என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் இப்போதும், எங்களுடன் இருக்கிறார் என்று தான் நினைத்து உள்ளேன்.கொரோனா தொற்றால் நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்காக, ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டது. அதன், 100வது நாள் நிகழ்ச்சியை ஆசீர்வதிக்க வேண்டும் என, பாலு சாரிடம் கேட்டேன்.அவர், 'நேரிலேயே வந்து பாடித் தருகிறேன்' என்றார்.

இந்நிகழ்ச்சிக்காக,டோக்கியோ தமிழ் சங்கத்தின் ஆதரவையும் கேட்டோம். சென்னையில் ஒரு ஸ்டூடியோவில், பாதுகாப்போடு, சமூக இடைவெளியை பின்பற்றி, அந்த நிகழ்ச்சி நடந்தது. பாலு சாரும், சரணுடன் வந்து பாடிக் கொடுத்தார்.ஆனால் இப்போது சில நல்லவர்கள், அந்த நிகழ்ச்சியால் தான், எஸ்.பி.பி.,க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எனக் கூறுகின்றனர். இது, உண்மைக்குப் புறம்பான விஷயம்.

சமூகவலைதளத்தில் தவறாக சித்தரிக்கின்றனர்.அந்த நல்லவர்களுக்கு ஒன்று தெரியவில்லை. கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அவர் இறந்ததே எங்களால் எனக் கூறும்போது, மனம் கலங்குகிறது. எப்பேர்பட்ட துர்பாக்கியமான நிலை இது. எந்த ஒரு கலைஞனுக்கும் இந்நிலை வரக்கூடாது.

பொதுவாக, இந்த மாதிரி விஷயங்களைப் புறம் தள்ளி விட்டு போகலாம். ஆனால், இதற்கு மேல் புறம்தள்ளினால், சரியாக வராது என்பதால் தான், விளக்கம் தர வேண்டியுள்ளது. தயவு செய்து தவறான விஷயங்களைப் பரப்பாதீர்.இவ்வாறு, முரளி கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X