அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி

Added : செப் 27, 2020
Share
Advertisement
சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகம்முழுதும், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை அறிவாலயத்தில், இம்மாதம், ௨௧ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுதும், ௩௦௦க்கும்

சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகம்முழுதும், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை அறிவாலயத்தில், இம்மாதம், ௨௧ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுதும், ௩௦௦க்கும் அதிகமான இடங்களில், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது.அதன்படி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.வடசென்னையில், கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார்.தென்சென்னை கந்தன்சாவடியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ; சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்; கும்பகோணத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X