மக்களை எலியாக்கிய சீனா; ரகசிய தடுப்பூசி பரிசோதனை

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பீஜிங் : கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக, தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, கொரோனா வைரஸ் பரவல், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும்
China, Corona Vaccine, Covid 19, corona virus, vaccine

பீஜிங் : கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக, தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, கொரோனா வைரஸ் பரவல், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளன. அதில், மூன்று தடுப்பூசிகள், மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன.பல நாடுகளில், தானாக முன்வந்து மக்கள், தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில், குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக, தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


latest tamil news



அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர், இந்தப் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களிடம், 'பரிசோதனை நடத்தப்படுவது குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது' என, ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஆனால், இதை சீனா மறுத்துள்ளது.

'உலக சுகாதார அமைப்பு, ஜூலை மாதத்தில் வழங்கிய ஒப்புதலின்படியே, பரிசோதனைகள் நடக்கின்றன. எந்த விதிமீறலும் இல்லை' என, சீன தேசிய சுகாதார கமிஷனின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

'பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில்,கட்டாயப்படுத்தி, ரகசியமாக, அதுவும் வெளியே பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
28-செப்-202014:39:59 IST Report Abuse
pattikkaattaan தடுப்பூசி தயாருன்னு சீனா சொன்னா , வாங்குவதற்கு போட்டி போட்டு உலக நாடுகள் நிற்கும் .. விலை குறைவு ஆச்சே ..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
28-செப்-202010:38:57 IST Report Abuse
blocked user சீனாவில் மனித உரிமையாவது மண்ணாங்கட்டியாவது....
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
28-செப்-202009:40:15 IST Report Abuse
தமிழ்வேள் இங்கும் அதே வேலையை செய்யலாம் ..தேச துரோக கம்மிகள் திராவிஷர்கள் மீது மருந்து சோதனை நடத்தலாம் எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக சொன்னவர்கள் இதை தாங்க இயலாதா என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X