எம்.பி., கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: உளவுத் துறையினர், டில்லியில் தன் அறையில் புகுந்து மிரட்டியதாக லோக்சபா சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், வேலுார் தொகுதி, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த். 'இது மிகவும் சீரியஸான விஷயம்... உடனடியாக இதை டில்லி போலீஸ் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, டில்லி போலீசாருக்கு உத்தர விட்டார் சபாநாயகர் ஓம் பிர்லா.இது தொடர்பாக டில்லி போலீசார், தமிழ்நாடு

புதுடில்லி: உளவுத் துறையினர், டில்லியில் தன் அறையில் புகுந்து மிரட்டியதாக லோக்சபா சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், வேலுார் தொகுதி, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த். 'இது மிகவும் சீரியஸான விஷயம்... உடனடியாக இதை டில்லி போலீஸ் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, டில்லி போலீசாருக்கு உத்தர விட்டார் சபாநாயகர் ஓம் பிர்லா.



latest tamil news


இது தொடர்பாக டில்லி போலீசார், தமிழ்நாடு இல்லத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கதிர் ஆனந்தின் உதவியாளர், சிலரை, தமிழக இல்ல வாயிலில் இருந்து அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. தமிழ்நாடு இல்ல அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.'தமிழ்நாடு இல்லத்தில் யாரும் தன்னிச்சையாக நுழைந்துவிட முடியாது. வாயிலில் பாதுகாப்பு சோதனை நடக்கும். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாடியிலும் சோதனை நடத்தப்படும்' என, பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். கதிர் ஆனந்த் உதவியாளர், வந்தவர்களை அழைத்துச் செல்வதால், அவர்கள் தெரிந்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்கின்றனர் டில்லி போலீசார்.


latest tamil news


விசாரணை விபரங்களை சபாநாயகருக்கு போலீசார் சமர்ப்பித்துவிட்டனர்.உளவுத் துறையும், 'எங்களுக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாம். லோக்சபா தேர்தலின் போது, கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின் நடந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவத்துக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் சம்பந்தம் இருக்குமா என, டில்லி போலீசார் சந்தேகப்படுகின்றனர்.மற்றொரு பக்கம், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்போவதாக, கட்சியின் மூத்த எம்.பி.,க்களிடம், கதிர் ஆனந்த் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
28-செப்-202019:29:57 IST Report Abuse
S. Narayanan நிழல் மிரட்டி இருக்கும்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
28-செப்-202016:21:34 IST Report Abuse
Baskar இவனுக்கு இவனே சூனியம் வைத்து கொள்கிறான். அப்பனுக்கு அறிவாலயத்தில் மதிப்பில்லை. மகனுக்கு டெல்லியில் மதிப்பில்லை. எனவே இதெல்லாம் ஒரு புப்ளிசிட்டி தான்.
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
28-செப்-202015:52:29 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் எனக்கென்னவோ சூனாபானா பஞ்சாயத்துல பட்ட பாடுதான் நாபகத்துக்கு வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X