ஜோ பிடேனை ஊக்கமருந்து சோதனை செய்துகொள்ள வலியுறுத்திய டிரம்ப்

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எந்த கட்சி வெற்றிபெரும் என்று இந்த தேர்தலை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.



latest tamil news



தேர்தலுக்கு முன்னர் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் ஊடகத்தின் வாயிலாக நேரடி விவாதம் நடத்துவது அமெரிக்க அரசியலில் வழக்கம். கடந்த 2015 அமெரிக்க அதிபர் தேர்தலில் இவ்வாறு ஹிலாரி கிளிண்டன்-டிரம்ப் விவாதிக்கத் துவங்கினார். இவர்களை நெறியாளர் ஒருவர் வழிநடத்துவார். ஆனால் இந்த விவாதம் பெரும்பாலும் கருத்து மோதல் காரணமாக சண்டையில் முடியும். தற்போது இதேபோல ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் வழங்கும் டோனால்ட் டிரம்ப்- ஜோ பிடேன் ஆகியோரது விவாதம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை ஜோ வாலேஸ் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் விவாதத்துக்கு தயாராகிவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு சர்ச்சை கருத்தை முன்வைத்துள்ளார்.


latest tamil news



இதன்படி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் 77 வயதான காரணத்தால் ஊக்கமருந்து எடுத்துக் கொள்கிறார். விவாதத்துக்கு வரும் முன்னர் அவர் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தானும் ஊக்கமருந்து சோதனைக்கு தயார் என டொனால்ட் டிரம்ப் இறுமாப்புடன் தெரிவித்துள்ளார்..!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
29-செப்-202006:48:17 IST Report Abuse
Muguntharajan இதுல இறுமாப்பு எங்க இருக்கு? ட்ரம்ப் சொல்வது சரிதான்.
Rate this:
Cancel
mothibapu - Prayagraj,இந்தியா
28-செப்-202009:45:07 IST Report Abuse
mothibapu ஆஹா ஊக்க மருந்து சாப்பிட்டு சண்டை போடுவீங்களா. இத நம் எம் எல் ஏ கலுக்ங்க தெரிஞ்ச மற்ற ஊக்க மருந்தை சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை போடாதிங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X