பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்பிபி சிகிச்சைக்கட்டணம்: சரண் விளக்கம்

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: கடந்த 25ம் தேதி காலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிகிச்சை கட்டணம் தொடர்பாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., இம்மாதம், 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட
Spb, spbbalasubramaniyam, spbcharan, MGmhospital

சென்னை: கடந்த 25ம் தேதி காலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிகிச்சை கட்டணம் தொடர்பாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., இம்மாதம், 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட முடியாமல் போனதால், துணை ஜனாதிபதி உதவியுடன், எஸ்.பி.பி., உடல் பெறப்பட்டதாக தகவல் பரவியது. இதனை எஸ்.பி.பி. மகன் சரண் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.


latest tamil news
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகிகள் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்து சிகிச்சை கட்டணம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
அப்போது சரண் கூறுகையில்;
எஸ்.பி.பி.,க்கான மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. சிகிச்சை கட்டணம் குறித்து வெளியான தகவல் தவறானது. எஸ்பிபி சிகிச்சைக்கு நாங்களும், மருத்துவ காப்பீடு மூலமும் அவ்வபோது கட்டணம் செலுத்தி வந்தோம். அவர் மறைவுக்கு பின்னர் சிகிச்சை கட்டணம் பற்றி கேட்ட போது வேண்டாம் என மருத்துவமனை கூறிவிட்டது. மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு கூறியிருந்தது. கட்டணத்தை செலுத்த யாருடைய உதவியையும் நாடவில்லை.

கொரோனா காரணமாக எஸ்.பி.பி., மரணமடையவில்லை. நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என்பதால், அதனை ஜீரணிக்க நீண்ட காலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
30-செப்-202022:05:06 IST Report Abuse
KavikumarRam திரு எஸ்.பி.பி.சரண் அவர்கள் தயவு செய்து இந்த மீடியா மாஃபியாவிடம் இருந்து விலகி இருங்கள். நீங்கள் யாருக்கும் எந்த விளக்கமும் தரவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எஸ்பிபி அவர்களின் உண்மை ரசிகர்கள் இந்த மீடியாவால் மிகவும் மனவருத்ததில் இருக்கிறோம். உங்களுக்கு எவ்வளவு துக்கமோ அதற்கும் மேல் நாங்களும் இன்னமும் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.ரசிகர்களின் முழு ஆதரவு உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் உண்டு.
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
29-செப்-202017:38:00 IST Report Abuse
Rangiem N Annamalai உங்களை நம்புகிறோம் .மக்கள்வேறு எதையும் நம்பவில்லை .குடும்பத்தார் கவலை கொள்ள வேண்டாம் .
Rate this:
Cancel
TT. KUMAR -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202021:56:15 IST Report Abuse
TT. KUMAR திரு. எஸ் பி பி அவர்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்கள் மனதை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X