ஓரங்கட்டப்படும் லாலு: முக்கியத்துவம் பெற முயலும் தேஜஸ்வி!

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் ஓரங்கட்டப்பட்டு, அவரது மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.ஆலு இருக்க லாலு இல்லை! பீஹாரில் தனது அரசியல் ஆதிக்கம் குறித்து, லாலு பிரசாத் யாதவ், 'சமோசாவில் ஆலு (உருளைக் கிழங்கு) உள்ள வரை பிஹாரில் லாலு இருப்பான்' என, அடிக்கடி கூறுவார். ஆனால், பிஹாரின் சமோசாக்களில்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் ஓரங்கட்டப்பட்டு, அவரது மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.



latest tamil news





ஆலு இருக்க லாலு இல்லை!


பீஹாரில் தனது அரசியல் ஆதிக்கம் குறித்து, லாலு பிரசாத் யாதவ், 'சமோசாவில் ஆலு (உருளைக் கிழங்கு) உள்ள வரை பிஹாரில் லாலு இருப்பான்' என, அடிக்கடி கூறுவார். ஆனால், பிஹாரின் சமோசாக்களில் தற்போதும் ஆலு இருக்க, லாலு மட்டும், கால்நடைத் தீவன வழக்கால் ஜார்கண்ட் சிறையில் இருக்கிறார். இதனால், லாலுவிற்கு பின், அவரது ராஷ்டிரிய ஜனதா தளத்தில் (ஆர்.ஜே.டி.,) இளைய மகனான தேஜஸ்வி முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.
பீஹாரில் நடைபெறவுள்ள மூன்று கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்காக, ஆர்.ஜே.டி.,யின் பிரசாரப் படங்களில், லாலுவின் படங்கள் அதிகம் இல்லை. அவருக்கு பதிலாக தேஜஸ்வியின் படங்கள் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன.


latest tamil news



'கடந்த 1990 முதல் 2005 வரை லாலுவின் 15 ஆண்டு ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது. இதனால், அவரது படங்களை பார்க்களை பார்த்தால், மக்களுக்கு ஊழல்கள் நினைவிற்கு வரும். இதைப் புரிந்துகொண்ட தேஜஸ்வி தனது தந்தைக்கு பதிலாக தன்னையே முன்னிறுத்துகிறார்' அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202020:00:47 IST Report Abuse
theruvasagan இங்க கூட இந்த மாதிரி ட்ரெண்டிங் ஆரம்பிச்சிருக்குற மாதிரி தெரியுது. எங்க நடந்தாலும் இனி நடக்கப்போவது நாட்டுககு நல்லதாக இருக்கட்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
28-செப்-202018:20:04 IST Report Abuse
S. Narayanan எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் என்ற பாடல் ஞாபகம் வருகிறது.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
28-செப்-202018:13:38 IST Report Abuse
Loganathaiyyan 1) இப்போ எல்லாம் வித வித சமோசா வர ஆரம்பித்து விட்டது உள்ளே ஆலு இல்லை பாசிப்பருப்பு, கடலை, பாதாம் எல்லாம் வர ஆரம்பித்தது விட்டது அப்போ லாலு அம்பேல். நீ வேணாம் போ என்று தேஜஸ்வி பொண்டாட்டி சண்டை போட்டுட்டுக்கொண்டு போனாலே அந்த தேஜஸ்வியா நீ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X