பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 5.30 லட்சம் பேர் குணமடைந்தனர்

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020
Share
Advertisement
தமிழகம், கொரோனா, கோவிட்19, கொரோனாவைரஸ், குணமடைந்தவர்கள், குணமடைந்தனர், மீண்டனர், சிகிச்சை, தொற்று, பரிசோதனை,  ஆண்கள், பெண்கள், உயிரிழப்பு,

சென்னை:தமிழகத்தில் மேலும் 5,554 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.30 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது 46,306 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று(செப்., 28) தமிழகத்தை சேர்ந்த 5,577 பேர், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 12 பேர் என மொத்தம் 5,589 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை, தமிழகத்தில் 5,86,397 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 184 ஆய்வகங்கள் உள்ளன. அதில், அரசு ஆய்வகங்கள் 118 தனியார் ஆய்வகங்கள். இன்று மட்டும், 80,465 மாதிரிகளுக்கும், 78,614 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 71,81, 125 ஆகவும், நபர்களின் எண்ணிக்கை 69,66,657 ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,396 பேர் ஆண்கள். 2,192 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 3,53,858 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,32,508 ஆகவும் அதிகரித்துள்ளது


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து, 5,30,708 ஆக அதிகரித்துள்ளது. இன்று 70 பேர் உயிரிழந்தனர். (41 பேர் அரசு மருத்துவமனையிலும், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்)இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X