ஊரடங்கு மனநிலை
உலகில் கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் இருக்க நேரிட்டது. பிரிட்டனில் ஊரடங்கு காலத்தில் பூனை, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வைத்திருந்தவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மார்ச் 23 - ஜூன் 1 வரையிலான காலத்தில் 60 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 90 சதவீதம் பேர் வளர்ப்பு பிராணிகளால் தங்கள் உணர்வுப்பூர்வமாக சமாளிக்க முடிந்தது. இவை மனநிலை பலப்படுத்த உதவுகிறது. அதுவும் பூனைகள் வளர்த்தவர்களிடம் நம்பிக்கை அதிகம் இருந்ததாம்.
தகவல் சுரங்கம்
உலக இருதய தினம்
உலகில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் இருதய நோய். இதில் 80 சதவீதம் தடுக்கப்படக் கூடியவை. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று உடல் உழைப்பு முற்றிலும் குறைந்து விட்டது. அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்து விட்டன. உணவுப் பழக்கமும் மாறிவிட்டன. 21 வயது இளைஞருக்கு கூட மாரடைப்பு வருகிறது. இதற்கு புகையிலை பயன்பாடு, உடற்பயிற்சியின்மை, இரவுப் பணி, துாக்கமின்மை, உடல் பருமன், நீரிழிவு குறைபாடு போன்றவை காரணம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE