ஒரே இடத்தையே நம்பக்கூடாது: சீனாவுக்கு பிரதமர் மோடி 'குட்டு'

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி: எந்த ஒரு பொருளின் தேவைக்கும் உலகமே ஒரே இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார் பிரதமர் மோடி. இந்தியா-டென்மார்க் இடையே ஆன்லைன் வாயிலாக இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடந்த போது பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.



latest tamil news



இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, சீனாவை மறைமுகமாக தாக்கி பேசினார். டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனிடம், பேசும் போது சீனா தான் உலகிற்கு மருந்து உள்பட பல முக்கிய பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்து வந்த நிலையில், திடீரென கொரோனாவால் நிறுத்திக்கொண்டது. இது உலக நாடுகளை கடுமையாக பாதித்தது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் வளர்ந்து வரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் நாடு மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்து வருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட இரு நாடுகளும் இணைந்துள்ளன.


latest tamil news





இணைந்து செயல்படுவோம்


சீனாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் மற்ற நாடுகளும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருகிறது. இந்தியாவை போன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்." இவ்வாறு டென்மார்க் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202010:36:37 IST Report Abuse
ஆப்பு மோடி பார்மசி மருந்துகளுக்கு விரைவில் வரும் விலை உயர்வு. இல்லேன்னா gst, p.m cares நிதிகளை இங்கே ஒதுக்குவார்கள்.
Rate this:
Cancel
29-செப்-202010:34:36 IST Report Abuse
ஆப்பு //எல்லா நாடுகளும் இந்தியாவுடன் இணந்து செயல் படலாம்.// WTO ந்நா அதுதான் சாமி.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
29-செப்-202008:22:30 IST Report Abuse
ponssasi ஒரே இடத்தை நம்புவது ஆபத்தானது அல்ல. நம்புவது தான் நன்மையையும் கூட, அது யார் எப்படிப்பட்டவன் என்பதில் தான் நன்மையா, தீமையா என்பது அடங்கியிருக்கிறது. இதை தான் பிரதமர் சொல்லியிருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X