தமிழீழம் அமைக்க ஓட்டெடுப்பு தேவை ; ராமதாஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழீழம் அமைக்க ஓட்டெடுப்பு தேவை' ; ராமதாஸ்

Added : செப் 28, 2020 | கருத்துகள் (19)
Share
சென்னை : 'ஐ.நா., சபை வாயிலாக, தமிழீழம் அமைக்க, உலகம் முழுதும் உள்ள, இலங்கை தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்த, இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். அவரது அறிக்கை:பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக் சே இடையே நடந்த பேச்சின் போது, பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் பயனாக, தங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என, இலங்கை தமிழர்கள்
 'தமிழீழம் அமைக்க  ஓட்டெடுப்பு தேவை' ;  ராமதாஸ்

சென்னை : 'ஐ.நா., சபை வாயிலாக, தமிழீழம் அமைக்க, உலகம் முழுதும் உள்ள, இலங்கை தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்த, இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை:பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக் சே இடையே நடந்த பேச்சின் போது, பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் பயனாக, தங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என, இலங்கை தமிழர்கள் நம்பினர். அவர்களின் நம்பிக்கை மீது, வெந்நீரை ஊற்றி சிதைத்திருக்கிறார் ராஜபக்சே. ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில், இந்தியாவின் யோசனையை, இலங்கை ஏற்க மறுத்திருப்பது, திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பு.

இத்தகைய தொடர் அவமரியாதைகளை, இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது என்பது தான், உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பு.இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் போன்றவற்றில், இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக, ஐ.நா., சபை வாயிலாக, தமிழீழம் அமைக்க, உலகம் முழுதும் உள்ள இலங்கை தமிழர்களிடம், பொது ஓட்டெடுப்பு நடத்த, இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X