அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆர்ப்பாட்டம் காங்கிரசார் புறக்கணிப்பு

Added : செப் 28, 2020
Share
Advertisement
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. புதிய வேளாண் மசோதாவை கண்டித்து, தமிழகம் முழுதும் நேற்று, தி.மு.க., - காங்., கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு மற்றும் கூட்டணி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

புதிய வேளாண் மசோதாவை கண்டித்து, தமிழகம் முழுதும் நேற்று, தி.மு.க., - காங்., கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்தது.இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. ஓரிரு காங்கிரஸ் தொண்டர்கள் மட்டும், கட்சி கொடி ஏந்தி வந்திருந்தனர்.இதேபோல், தெற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் ரகுபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், பொன்னமராவதியில் நேற்று காலை நடந்தது.

ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க, காங்., வட்டார நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த அதிருப்தியில் காங்கிரஸ் நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X