மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் வழங்கப்படுமா?| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் வழங்கப்படுமா?

Updated : செப் 30, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (3)
Share
சென்னை : சந்தை, திருமண மண்டபம், துக்க நிகழ்வுகள் என, மக்கள் கூடும் இடங்களில், முகக் கவசங்கள் வினியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.கொரோனா தொற்று உள்ளவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்கள், மருத்துவமனைகளின் வசதிகளை, மாவட்ட வாரியாக தினசரி வெளியிடும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, மதுரை மத்திய
மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் வழங்கப்படுமா?

சென்னை : சந்தை, திருமண மண்டபம், துக்க நிகழ்வுகள் என, மக்கள் கூடும் இடங்களில், முகக் கவசங்கள் வினியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்கள், மருத்துவமனைகளின் வசதிகளை, மாவட்ட வாரியாக தினசரி வெளியிடும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, மதுரை மத்திய தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடுத்திருந்தார்.இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ''தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருப்பது குறித்த தகவல், இணையதளத்தில் இல்லை.
''சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவதை, பொது மக்கள் கடைபிடிப்பது இல்லை; அதை கண்காணிப்பதும் இல்லை,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் விஜயகுமார் ஆஜராகி, ''வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, தினசரி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மாவட்டங்களில் இருந்து வரும் வைரஸ் தொற்று எண்ணிக்கையும், மாநில அளவில் குறிப்பிடும் எண்ணிக்கையும், ஒன்றாக இருக்க வேண்டும். இணையதளம் எப்போதும் செயலில் இருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், சந்தைகள், துக்க நிகழ்வுகளில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா; முகக் கவசங்கள் அணிகின்றனரா என்பதை சரிபார்க்கவும், நிபந்தனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பார்க்கவும், அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
முகக் கவசம் இன்றி யாரும் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, மக்கள் கூடும் இடங்களான திருமண மண்டபங்கள், சந்தைகள், துக்க நிகழ்வுகளில், முகக் கவசங்களை வினியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அரசு எடுத்த நடவடிக்கையை, அக்.,16ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X