தமிழ்நாடு

பனியன் நிறுவனத்துக்கு ஆட்கள்... தேடும் படலம்!

Updated : செப் 29, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். கொரோனாவால், ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வுக்குப்பின், மே மாதம் முதல், நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கின.அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலிருந்து,
பனியன் நிறுவனத்துக்கு ஆட்கள்... தேடும் படலம்!

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். கொரோனாவால், ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வுக்குப்பின், மே மாதம் முதல், நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கின.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலிருந்து, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வர துவங்கிவிட்டன. தீபாவளி நெருங்குவதால், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களும், பண்டிகை கால ஆடை தயாரிப்பில் வேகம்காட்டி வருகின்றன. இதனால், தற்போது, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, கட்டிங் மாஸ்டர், ஓவர்லாக், பிளாட் லாக், சிங்கர், கைமடி, செக்கிங் பிரிவுகளில் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. தேவையான தொழிலாளரை பணி அமர்த்தும்வகையில், நிறுவனங்கள், ஆட்கள் தேவை விளம்பர பலகைகளை, தொங்கவிட்டுள்ளன.
ஆடை உற்பத்தி துறையினர் கூறியதாவது:கொரோனாவால், கடந்த ஆறு மாதங்களாக ஆடை உற்பத்தி நடைபெறவில்லை. தீபாவளி நெருங்கும் நிலையில், உள்நாட்டு சந்தையில் ஆடை தேவை அதிகரித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பண்டிகை கால வர்த்தகத்துக்கு தேவையான ஆடை தயாரிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.
வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பெரும்பாலானோர், இன்னும் திருப்பூர் திரும்பவில்லை. போதிய தொழிலாளரை பணி அமர்த்தினால் மட்டுமே, பண்டிகை கால ஆடை உற்பத்தியை சிறப்பாக பூர்த்தி செய்யமுடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202013:46:35 IST Report Abuse
ஆரூர் ரங் வேலை செய்ய இளைஞர்களுக்கு எங்கே போவது? தேடினாலும் 😇😇 கிடைக்கமாட்டார்கள். எல்லோரும் பி டெக்☻. எப்படி உழைக்கிற வேலைக்கு வருவாங்க? நேத்து😎 தீயமுக😎 போராட்டத்துல கொடுத்த குவாட்டர் மப்பே தெளியாம உபீஸ் 200 நோட்டொட 🍷🍷டாஸ்மாக் 🍺🍻🥃வாசல்ல நிக்கிறாங்க. முடிஞ்சா கூப்பிட்டுப் பாருங்க
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
29-செப்-202010:48:37 IST Report Abuse
G  Mahalingam இந்த வேலையை 50 சதவீதம் தமிழர்கள் செய்ய மாட்டார்கள். கம்யூனிஸ்ட் தொழில் சங்கம் தமிழர்களை சேர்த்து விடமாட்டார்கள். வெளி மாநிலங்களில் இருந்துதான் தொழிலாளர்கள் வரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X