பணம் கை மாறினால்தான் பட்டா மாறுதல்... மனம் போனபோக்கில் கட்டாய வசூல்!

Updated : செப் 29, 2020 | Added : செப் 28, 2020
Advertisement
மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்த ஒரு மாலை வேளை. சித்ராவும், மித்ராவும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் இருந்தனர்.''என்னக்கா, எந்த வருஷமும் இல்லாம, இந்த தடவ நல்ல மழை போலிருக்கே...''''ஆமான்டி, எல்லா பக்கமும், குளம், குட்டைக்கு தண்ணி வருது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சிதான். இதே மாதரி, பல்லடத்தில் ஆபீஸர் 'காட்டிலும்' பண மழை கொட்டுதாம்.''''எந்த ஆபீசருங்க?''''வேறெங்கெ,
 பணம்,பட்டா மாறுதல்,  கட்டாய வசூல்!

மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்த ஒரு மாலை வேளை. சித்ராவும், மித்ராவும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் இருந்தனர்.

''என்னக்கா, எந்த வருஷமும் இல்லாம, இந்த தடவ நல்ல மழை போலிருக்கே...''

''ஆமான்டி, எல்லா பக்கமும், குளம், குட்டைக்கு தண்ணி வருது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சிதான். இதே மாதரி, பல்லடத்தில் ஆபீஸர் 'காட்டிலும்' பண மழை கொட்டுதாம்.''

''எந்த ஆபீசருங்க?''

''வேறெங்கெ, ரெவின்யூவில்தான். பட்டா மாறுதல் செய்ய போனா, யாராக இருந்தாலும், 'கப்பம்' கட்டினால்தான், வேலை நடக்குதாம். இல்லாட்டி, ஏதாவது ஒரு சின்ன தப்பை கூட பெரிசா காட்டி, 'ரிஜெக்ட்' பண்ணிடறார்,''

''சொத்து மதிப்பை தெரிஞ்சுகிட்டு, பல ஆயிரம் முதல் லகரம் வரைக்கும் தாராளமாக வாங்கும், அவரை, உயரதிகாரிகள் யாருமே கண்டுக்கறதில்லையாம். யாராவது கேட்டாகூட, எனக்கு டி.ஆர்.ஓ., ஆபீசில் ஆள் இருக்கு. என்னையும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கொக்கரிக்கிறாராம். பாதிக்கப்பட்ட ஒரு சிலர், சி.எம்., கலெக்டருக்கு பெட்டிஷன் போட்டுட்டாங்க,

''அப்போது, மித்ராவின் 'வாட்ஸ்அப்' வந்த ஒரு தகவலை படித்து விட்டு, ''அக்கா, இந்த 'புஷ்பராஜ்' மாமாவுக்கு சின்ன வயசிலேயே, கவர்மென்ட் வேலை கெடைச்சாலும் கெடைச்சுது. மனுஷன் சகட்டுமேனிக்கு 'வாங்கி' தள்ளுகிறாராம்,'' என்றார்.

மழை நீடிக்கவே, சித்ரா, பாப்கார்ன் வாங்கி வந்தாள். அதனை சாப்பிட்டவாறே, ''ஏலம் எடுத்த பழைய 'டூ வீலருக்கு' சர்டிபிகேட் வாங்கறதுக்குள்ள, கிறுகிறுத்துப்போகுதாம்டி,'' என்றாள்.

''போலீஸ் பறிமுதல் செஞ்ச, கேட்பாரற்ற கிடக்கற 'டூ வீலர்'களுக்கு ரெவின்யூ மூலம் ஏலம் நடக்குது. தாசில்தார்களை, 'தாஜா' செஞ்சு, செல்வாக்கா இருக்கறவங்க, எப்படியே நல்ல வண்டியை 'கேட்ச்' பண்ணிடறாங்களாம். ஓட்டை, ஒடசல் இப்படி, இரும்புல எதுயிருந்தாலும், காசு பார்க்கறதுக்கு ஒரு கூட்டம் ரெடியாயிருக்குதுடி,''

''அக்கா... சில ஆபீசருக்கு எந்த பொருளை பார்த்தாலும், காந்தி படம் போட்ட நோட்டாவே தெரியறப்ப ஒன்னும் செய்ய முடியாது,'' என்ற மித்ரா,

''யாரை கேட்டு செலவு கணக்குல சேர்த்தீங்கனு கேட்டு... 'கவுன்சில்' கூட்டத்துல சேர்மன் கலகலக்க வச்சுட்டாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''எந்த யூனியனில் இது நடந்தது?''

''யூனியனில் இல்லக்கா. மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டத்துல டீசல் செலவு, ஆபீஸ் செலவு, 'அது இது'னு, செலவு கணக்கு வச்சிருக்காங்க''

''தீர்மானத்த பார்த்த சேர்மன் 'டென்ஷன்' ஆகி, 'டீசல் கணக்கு அதிகமாக இருக்கு... யாரை கேட்டு செலவு செஞ்சீங்க? எதுக்கு தீர்மானத்துல சேர்த்திருக்கீங்க?னு, நான் கையெழுத்து போட மாட்டேன்; யாரும் கையெழுத்து போடாதீங்கனு, 'காச்...மூச்'னு சத்தம் போட்டாங்களாம். கடைசியா செலவு கணக்கு தீர்மானம் நிறைவேற்றாம தள்ளுபடி பண்ணிட்டாங்க...''

''இது மாதிரி, பிரச்னை வந்திரும்னு தான், சில யூனியனில், தேர்தல் வரைக்கும், ரகசியமாகவே கவுன்சில் கூட்டம் நடத்திடனும்னு, அதிகாரிங்க முடிவு பண்ணிட்டாங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.

''ஏன்டி, மித்து, கார்ப்ரேஷனில் ஓடற பல வண்டிகள், ஆபீசர்களோட பினாமிகளோடதாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், இந்த வண்டிகளுக்கு உடனுக்குடன் 'செட்டில்' பண்ணிடறாங்களாம்,''

''இருந்தாலும் இருக்கும்,'' சொன்ன மித்ரா, ''ரெஜிஸ்டர் ஆபீசில், கிரயம் பண்ணியவுடன், பட்டா மாறுதல் செய்றதில்லையாம்,'' அடுத்த தகவலை கூறினாள்.

''அதுதான், கவர்மென்ட்டே சொல்லிடுச்சு. அப்புறமென்ன?''

''ஆனா, நம்ம மாவட்டத்தில் அது இன்னும் நடைமுறைக்கு வரலை. இது விஷயத்தில, ரெவின்யூவும், சர்வே செக் ஷனும் கூட்டணி வச்சுகிட்டு, நில உரிமையாளர்களை இழுத்தடிக்கின்றனர். இதப்பத்தி, நெறைய கம்ப்ளைன்ட் வந்ததால, கலெக்டர் சிறப்பு கூட்டம் நடத்தி அட்வைஸ் பண்ணினார்,''

''அப்டியும் கூட, யாரும் கண்டுக்கலை. பட்டா மாறுதலுக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட ஆபீசருக்கு 'படி'யளந்தால் மட்டுமே, பட்டா மாறுதலாகிறது,''

''கலெக்டர் சொல்லியே கேக்கலைன்னா, இத எங்க போய் சொல்றதுடி. இதேமாதிரி, உணவு பாதுகாப்பு துறையினர், எங்கயுமே ரெய்டுக்கு போறதில்லையாம். இதனால, பல பொருளில், குறிப்பா எண்ணெயில கலப்படம் ஜாஸ்தியாயிடுச்சாம்,''

''போன வாரம், அரிசிக்கடை வீதியில் ஒருத்தர் எண்ணெய் வாங்கிட்டு போய் சமைச்சு சாப்பிட்டிருக்கார். அடுத்த நாள், அவரது முகம் வீங்கிடுச்சாம். நேரா கடைக்கு போய் சத்தம் போட்டதில், கடைக்காரர், அஞ்சாயிரம் கொடுத்து அமுக்கிட்டாராம்,''

''ஆமாங்க்கா... இவங்க அடிக்கடி ரெய்டு போனாத்தான் சரியாயிருக்கும். ஆனா... இவங்க என்னடான்னா?'' என இழுத்த மித்ரா, ''அக்கா, அவங்களை மாதிரியே டிரான்ஸ்போர்ட் ஆபீசரும், தீவிர வசூல் வேட்டையில இறங்கிட்டாங்க...''

''அவங்க எப்பவும் வேட்டைக்காரர்கள்தான்டி, இதென்ன புதுசா?''''இருந்தாலும், இந்த வசூல் 'ரூட்' புதுசுங்க. சிட்டியில, மினி பஸ் எந்த ரூட்டில், எந்த நேரத்தில், எத்தனை பேரையும் கூட்டிட்டு போலாம். யாராவது ஆபீசர் ரெய்டுன்னா, போன் வந்துவிடுமாம். இதனால, ஒரு சில மினி பஸ்காரங்க, ரெகுலர் ரேஞ்ச்சுக்கு 'கல்லா' கட்டுறாங்களாம்,

''அப்போது, போலீஸ் ஜீப் சென்றது. அதைப்பார்த்த சித்ரா, ''சிட்டிக்கு,சென்னையில் இருந்து வந்த, 'சுந்தர'மான அதிகாரி, தன்னோட ஆபீசுக்கு, 'ஸ்பான்சர்'களை எதிர்பார்த்து துாது விட்டார்.

சிட்டியில இருக்கிற பல அதிகாரிங்க, அவருக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்துட்டு இருக்காங்களாம்,'''

'ருசி கண்ட பூனை, சும்மா இருக்குமாங்க்கா? இந்த தெற்கு 'டிராபிக்' போலீஸ்காரங்க, வசூலில் கில்லியாக இருக்காங்களாம்,''

''ஆமான்டி. வண்டியை பிடிக்கும் போது, 'ஆர்.சி., புக்' வாங்கி வச்சட்டு, பைன் கட்டிட்டு வந்து, வாங்கிட்டு போக சொல்றாங்க. கோர்ட்டில், பைன் கட்ட ஒரு வக்கீலையும் ரெடி பண்ணி கொடுக்குறாங்களாம். ஆனா, பைன் கட்டமாக, இவங்களே 'சிண்டிகேட்' போட்டு, பங்கு போட்டுக்கறாங்களாம். அதிலும், ரகுவம்சமான ஒருத்தர்தான் இந்த வசூல் வேட்டைக்கு கேப்டனாம்,''

''இந்த மாதிரி கூட்டணி போடறவங்களை, அதிகாரி கண்டுகிட்ட பரவாயில்லதான். அக்கா, இதேபோல, 'தாரா....' ஸ்டேஷனில் சரக்கு, ஒரு நம்பர் லாட்டரி விக்க முடிவு செய்றதே, ஆபீசரின் 'சாரதி'தானாம். ஏரியாக்குள்ள சட்டவிரோத செயலுக்கு, இவர்தான் அனுமதி குடுப்பாராம்,'' கூறி முடித்த சித்ராவின் போனில், 'சிலம்பரசன்' நடிக்கும் படத்தின் தகவல் 'வாட்ஸ்அப்'பில், வந்தது.அதைப்படித்த சித்ரா, சிரித்து கொண்டே, ''மித்து, மழை 'ஸ்லோ'வாயிடுச்சு. போலாம்வா,'' என்றதும், மித்ரா எழுந்தாள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X