எஸ்.பி.பி., - மருத்துவமனை பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்: சரண் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., - மருத்துவமனை பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்: சரண்

Updated : செப் 30, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (5)
Share
சென்னை : ''எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றியும், எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனை பற்றியும், வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ''மருத்துவமனை நிர்வாகம், எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை; மருத்துவமனைக்கு எங்கள் குடும்பம் கடமைப்பட்டுள்ளது,'' என, எஸ்.பி.பி.,யின் மகன் சரண் கூறினார்.சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின்
எஸ்.பி.பி.,  மருத்துவமனை, வதந்தி, சரண்

சென்னை : ''எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றியும், எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனை பற்றியும், வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ''மருத்துவமனை நிர்வாகம், எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை; மருத்துவமனைக்கு எங்கள் குடும்பம் கடமைப்பட்டுள்ளது,'' என, எஸ்.பி.பி.,யின் மகன் சரண் கூறினார்.

சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண், நேற்று அளித்த பேட்டி:அப்பாவுக்கு, டாக்டர்கள் சபாநாயகம், சுரேஷ்ராவ், தீபக், கிஷோர் ஆகி யோர் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் அப்பா அனுமதிக்கப்பட்டது முதல், அவரை மருத்துவமனை நிர்வாகம் நன்றாக கவனித்து வந்தது. எங்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது பிரச்னை என்றால், மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனைக்கு ஏதாவது என்றால், எங்கள் குடும்பமும் துணை நிற்கும். மருத்துவமனைக்கு, எங்கள் குடும்பம் கடமைப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு, அப்பா வந்ததில் இருந்து, தற்போது வரை, வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.


கடைசியாக வந்த வதந்தியில், 'சிகிச்சைக்கான கட்டணத்தை, எங்களால் செலுத்த முடியவில்லை. தமிழக அரசிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. துணை ஜனாதிபதியின் மகள் உதவினார். 'அதன் பிறகே, மருத்துவமனை நிர்வாகம் அப்பாவின் உடலை ஒப்படைத்தது' என, வதந்திகள் வருகின்றன.இதுபோன்ற வதந்திகள் முற்றிலும் தவறானவை. அப்பா அனுமதிக்கப்பட்டது முதல், வாரம்தோறும் மருத்துவமனைக்கான தொகையை செலுத்தி வந்தோம். மேலும், மருத்துவ காப்பீட்டில் இருந்தும், ஒரு பகுதி தொகை செலுத்தப்பட்டது.

அப்பா இறந்தபின், மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து கேட்டோம். ஆனால், மருத்துவமனையின் தலைவர், 'கட்டணத்தை செலுத்த வேண்டாம். விரைந்து நல்லபடியாக, அவரை வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்' என்றார். மருத்துவமனை நிர்வாகம், எந்த நிர்ப்பந்தமும் விதிக்கவில்லை. அப்பாவுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம், தமிழக அரசு பேசியுள்ளது. ஆனால், அரசிடம் உதவி கோரும் அளவிற்கு, மருத்துவமனை நிர்வாகம் எங்களை நடத்தவில்லை.தாமரைபாக்கத்தில், அப்பாவுக்கான நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. பொது மக்கள் வந்து மரியாதை செலுத்துவதற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவமனை பற்றியும், அப்பா குறித்தும் வதந்திகளை பரப்பாதீர். அம்மாவுக்கு நான் ஆறுதல் கூற வேண்டும்; எங்களை விட்டு விடுங்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
24 மணி நேரத்தில் நடந்தது என்ன?மருத்துவ குழுவினர் அளித்த பேட்டி:எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்றால், நுரையீரல் பாதிக்கப்பட்டது. பின், கொரோனா தொற்று குணமடைந்தாலும், நுரையீரல் பாதிப்பை சரி செய்ய முடியவில்லை. அவருக்கு, 'எக்மோதெரபி' அளிக்கப்பட்டு வந்ததால், அடிக்கடி தொற்று ஏற்பட்டு வந்தது. அதில், 10ல், ஒன்பது தொற்றுகள் சரி செய்யப்பட்டு வந்தன.
கடைசி, 48 மணி நேரத்தில், தீவிர தொற்று அவரை தாக்கியது. அதற்கான மருந்துகள் அளித்தும் பயனளிக்கவில்லை. இதனால், உடல் உறுப்புகள் செயலிழக்க துவங்கின.நீண்டகால எக்மோதெரபியால், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் உயிரிழந்தார். எஸ்.பி.பி., பேசவில்லை. ஆனால், சைகை வாயிலாகவும், எழுதியும் புரிய வைத்தார்; சிரிக்கவும் செய்தார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X