பொது செய்தி

தமிழ்நாடு

பரந்துார் சுகாதார நிலையத்தில் 'பிசியோதெரபி' பிரிவு துவக்கம்

Added : செப் 28, 2020
Share
Advertisement
வாலாஜாபாத்:பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'பிசியோதெரபி' மருத்துவம் துவக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலரின் தலைமை இடமாகவும் உள்ளது.இங்கு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் என, அழைக்கப்படும், 'பிசியோதெரபி' பிரிவு துவக்கப்பட்டுஉள்ளது. இது கிராமப்புற முதியவர்கள் மற்றும்
 பரந்துார் சுகாதார நிலையத்தில் 'பிசியோதெரபி' பிரிவு துவக்கம்

வாலாஜாபாத்:பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'பிசியோதெரபி' மருத்துவம் துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலரின் தலைமை இடமாகவும் உள்ளது.இங்கு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் என, அழைக்கப்படும், 'பிசியோதெரபி' பிரிவு துவக்கப்பட்டுஉள்ளது. இது கிராமப்புற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, பெரிய வரப்பிரசாதாமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'பிசியோதெரபி' பிரிவு துவக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் சனி என, இரு தினங்களில், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிற நாட்களில், சுகாதார செவிலியர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களில், வீடு தேடி சென்று கை, கால்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X