தென்கோடியில் இருந்து தோன்றிய ஒளி தினமலர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்கோடியில் இருந்து தோன்றிய ஒளி 'தினமலர்'

Added : செப் 28, 2020 | கருத்துகள் (2)
Share
உலகில் முதன்முதலில் நாளிதழ் துவக்கியது ஜெர்மனியின் ஜோகன் கார்லஸ் நகரில் 1605ம் ஆண்டில் தான். பச்சையப்பன் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய ஜி.சுப்ரமணிய ஐயர்தான் முதலாவதாகதமிழ் பத்திரிகை துவங்கியவர். அவர்1881ல் 'சுதேசமித்ரன்'துவங்கினார்.அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து 'ஹிந்து' ஆங்கில நாளிதழை ஆரம்பித்து நிர்வாக ஆசிரியராக இருந்தார். அந்தக் காலத்தில்
தென்கோடியில் இருந்து தோன்றிய ஒளி 'தினமலர்'

உலகில் முதன்முதலில் நாளிதழ் துவக்கியது ஜெர்மனியின் ஜோகன் கார்லஸ் நகரில் 1605ம் ஆண்டில் தான். பச்சையப்பன் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய ஜி.சுப்ரமணிய ஐயர்தான் முதலாவதாகதமிழ் பத்திரிகை துவங்கியவர். அவர்1881ல் 'சுதேசமித்ரன்'துவங்கினார்.

அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து 'ஹிந்து' ஆங்கில நாளிதழை ஆரம்பித்து நிர்வாக ஆசிரியராக இருந்தார். அந்தக் காலத்தில் சென்னையில் பிரபலமான 'மதராஸ் மகாஜன சபா, மதராஸ் பிரசிடென்சி' என இரு கம்பெனிகளை நடத்தியவர்இவர்.சமூக போராளி,சீர்திருத்தவாதி,முற்போக்குச் சிந்தனையாளர்.13 வயதில் விதவையான தன் மகளுக்கு அந்தக் காலத்திலேயே மறுமணம் செய்து பிராமண சமூகத்தினரால்தள்ளி வைக்கப்பட்டார்.தலித் மக்களுக்காகப் பாடுபட்டவர்.

'ஹிந்து' பத்திரிகை நடத்தும் போது பல அறிஞர் பெருமக்களை கட்டுரையாளர்களாக சேர்த்துக் கொண்டார். 1905ல் கஸ்துாரி ரங்க ஐயங்கார் 'ஹிந்து' நாளிதழை வாங்கினார்.'சுதேசமித்ரன்' பத்திரிகையை 1915ல் ரங்கசாமி ஐயங்காருக்கு விற்று விட்டார் சுப்ரமணிய ஐயர்.1881 - 1917 வரை போட்டியின்றி ஆட்சி புரிந்தது சுதேசமித்ரன். 1917ல் 'தேச பக்தன்' என்ற நாளிதழை ஆரம்பித்தார் வி.கல்யாண சுந்தரனார். இவருக்கு பின் உ.வே.சா. ஐயர்இந்த இதழின் மூலம் தமிழறிவை ஊட்டினார். இது 1921ல் நின்றது.


பத்திரிகை உலகில் போட்டி'ஜி.சுப்ரமணிய ஐயர் ஆதிக்கத்திலிருந்த சுதேசமித்ரன்,ஹிந்து பத்திரிகைகள்காங்கிரசுக்கு முக்கியத்துவம் தராததால் இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளிதழை டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆரம்பித்தார். இவரின் சொந்த ஊர் சேலம் ராசிபுரம். காந்தியை ராசிபுரம் அழைத்து வந்தவலிமை மிக்க தலைவர், ராஜாஜியின் நண்பர்.பின்னர்மும்பையைச் சேர்ந்த சதானந்த் என்ற தமிழர் 'இந்தியன் எக்ஸ்பிரசை' வாங்கினார்.

தமிழில்தினசரி பத்திரிகை ஆரம்பிக்க நல்ல பெயர் எழுதி அனுப்புமாறு வாசகர்களுக்குவேண்டுகோள்கொடுத்து 10 ரூபாய் சன்மானம் அறிவித்தார்.மயிலாப்பூரை சேர்ந்த அட்சய லிங்கம், சுவாமிநாதன் என்ற இருவர் தான் 'தினமணி' என்ற பெயரை எழுதிக் கொடுத்து சன்மானம் பெற்றனர். 1932ல் பாரதி நினைவுநாளில் 'தினமணி' நாளிதழ் ஆரம்பமானது. வாசகர்கள்பங்களிப்புடன் பல செய்திகளை வெளியிட்டார்.மேலும் அந்தக் காலத்து 'பேனா மன்னன்' டி.எஸ்.சொக்கலிங்கம்,'தமிழ்நாடு' பத்திரிகை துணை ஆசிரியர் ஏ.என்.சிவராமன், 'சங்கு' பத்திரிகை ஆசிரியர் சங்கு சுப்பிரமணியம் போன்றோர் 'தினமணி'யில் சேர்ந்து 'சுதேசமித்ரன்' பத்திரிகையை சரிய வைத்தனர்.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 'தமிழ்நாடு' என்ற நாளிதழை டாக்டர் வரதராஜுலு நாயுடு

துவக்கினார்.'சுதேசமித்ரன்', காந்திக்கு எதிரான நிலை எழுந்ததால் 'தமிழ்நாடு' நாளிதழ் பிரபலமடைந்தது. அதிலிருந்து சில காங்கிரசார் வெளியேறி 'இந்தியன்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தனர்; துவக்கத்தில் வளர்ச்சியடைந்து பின் அதுவும் நின்றது.1933ல் 'ஜெயபாரதி' என்ற பத்திரிகை காலணாவுக்கு எட்டு பக்கங்களில் வெளியானது. உள்நாட்டுநிறுவனவிளம்பரங்களை மட்டும் வெளியிட்டது. இதனால் விளம்பர வருமானமின்றி தோல்வி அடைந்தது.பின் பிலிப் தாமஸ்போன்ற காங்கிரஸ்காரர்களால் நடத்தப்பட்டது. பல அரசியல் காரணங்களால் ஆளும் கட்சியின் இடர்களால் இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

அரசியல் கட்சிகளும் பத்திரிகைகளும்

தினசரி, வார இதழ்கள் என பத்திரிகை பலம் இல்லாமல் எந்த அரசியல் இயக்கமும் தமிழகத்தில் காலுான்ற முடியாது. அதற்கு சிறந்த உதாரணம் ஈ.வெ.ரா.இவர் பகுத்தறிவு, சுயமரியாதை என வாரப் பத்திரிகைகளை ஆரம்பித்து குத்துாசி குருசாமி, அண்ணாதுரை,நெடுஞ்செழியன்,அரங்கண்ணல், கருணாநிதி போன்றோரை சம்பளம் கொடுத்து வீட்டின் மேல் மாடியில் தங்க வைத்து எழுத வைத்தார். நாகம்மை இவர்களுக்கு தினமும் உணவு வழங்கினார்.
பின் ஊர் ஊராக பிரசாரம் மேற்கொண்டு பத்திரிகை சந்தாதாரர்களை உயர்த்தினார். இப்படி திராவிட இயக்கம் பத்திரிகை மூலம் தொண்டர்களிடம் கருத்துகளை கொண்டு சேர்த்தது.நாளிதழ் ஆரம்பித்து கஷ்டப்பட்டு ஆட்சி அதிகாரம் வந்த பின் கட்சி உறுப்பினர்களை சந்தாதாரர்களாக மாற கட்டாயப்படுத்தினர். சந்தாதாரர்களுக்குதான்கட்சி பதவி, தேர்தலில்போட்டியிட 'சீட்' கொடுத்தனர். லட்சக்கணக்கில் சந்தாதாரர்களை உருவாக்கி கட்சி நாளிதழ்கள் வளர்ந்தன.காமராசர் தான் உயிரோடு இருக்கும் வரை 'நவசக்தி' நாளிதழை நடத்தினார்; பின் அவர் மறைவிற்கு பின் விற்கப்பட்டது.


'தினமலர்'பல்லாயிரக்கணக்கான தியாகிகள் வாழ்ந்த தமிழகத்தின் தென்கோடியில் நாஞ்சில் நாட்டு குமரி மண்ணில் பிறந்தவர் டி.வி.ராமசுப்பையர். தேசியவாதி, சிறந்த சிந்தனையாளர்.திருவாங்கூர் சமஸ்தான திவானாக பணியாற்றிய சர்.சி.பி.ராமசாமி ஐயரோடு இணைந்து
கட்டாயக் கல்வி முறையை கொண்டு வந்தார். கன்னியாகுமரி மாவட்டம் அப்போது திருவாங்கூர்,கொச்சி மாநிலமாக இருந்தது.இருவரும் மாவட்டம் முழுவதும் கல்வி சாலைகள்துவக்க அரசுக்கு உதவினர். இதனாலேயே தமிழகத்தில் மிகுந்த கல்வியறிவு கொண்ட மாவட்டமாக குமரி திகழ்கிறது.

ராமசுப்பையர் 1951 செப். 6ல் 'தினமலர்' நாளிதழை திருவனந்தபுரத்தில் துவக்கினார். தமிழகம் தனி மாநிலமாக பிரிந்த போது தன் நாளிதழை திருநெல்வேலிக்கு மாற்றினார். தென் தமிழகத்தின் துறைமுக நகரான துாத்துக்குடியில் துறைமுகத்தை மேம்படுத்தபல கட்டுரைகளை எழுதினார்.பஞ்சம் தாங்கிய பூமியான கோவில்பட்டி, எட்டையபுரம், ஒட்டப்பிடாரம், திருச்செந்துார், விளாத்திக்குளம் போன்ற ஊர்களை இணைத்து தனி மாவட்டமாக்கவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி திண்டுக்கல்,தேனிநகரங்களை தனி மாவட்டமாக்கவும் தொடர்ந்து எழுதினார். எந்தக் கட்சியிலும் சாராமல் நடுநிலையில் நாளிதழை நடத்தினார்.அந்த காலத்தில் சென்னையில் இருந்து குமரிக்கு திருவனந்தபுரம் வழியாகவே ரயில்பாதை இருந்தது.நெல்லை - குமரிக்கு
நேரடிரயில் தொடர்பு தினமலரால் தான் கிடைத்தது.

தினமலர் நாளிதழ் ஏழை, எளிய மக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தனி மனிதனாகவும் அவர் சந்ததிகளின் உதவி மற்றும் உழைப்பாலும் இன்று தமிழ் மக்கள் உள்ளத்தில் குடிபுகுந்து வளர்ந்த தினமலர் 70 ஆண்டுகள் நிலைத்து வெற்றி கண்டது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

ராமசுப்பையர் கூர்மையான மதிநுட்பம் உள்ளவர். தமிழ் மக்கள் வளர்ச்சியில் நாட்டமுள்ளவர். கடந்த கால நாளிதழ்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பாடமாக்கி தினமலர் இன்று நல்ல நாளிதழாக மாற்றியவர்.வாழ்க தினமலர்...ராமசுப்பையர் நாமம்...என் அனுபவ ரீதியாக மருத்துவராக பலரது கருத்துக்களை அறிந்ததால் இதை எழுதுகிறேன். அரசியல் சாராத சமூக விழிப்புணர்வு உள்ளதால் தான் 'தினமலர்' மக்கள் உள்ளத்தில் அவர்களது குடும்பத்தில் ஓர் அங்கமாய் விளங்குகிறது. தமிழ் மக்கள் உள்ளங்களில் 'தினமலர்' நீங்காது வாழ வாழ்த்துக்கள்.டாக்டர் சு.அர்த்தனாரிஇதய நோய் ஊடுருவல் நிபுணர் சென்னை. 98843 53288

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X