கொரோனாவை காரணம் காட்டி பயங்கரவாதிகளை பாக் மறைக்க முயற்சி: இந்தியா குற்றச்சாட்டு

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க்: 'கொரோனா தொற்றை காரணம் காட்டி, 4,000 பயங்கரவாதிகளை, பட்டியலில் இருந்து மறைத்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கில், மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாடு முயற்சிக்கிறது' என, ஐ.நா., பொதுக்குழுவில், இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.'ஜம்மு -- காஷ்மீர் பிரச்னைக்கு, சர்வதேச அளவிலான சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்றால், தெற்காசியாவில் அமைதியும்,

நியூயார்க்: 'கொரோனா தொற்றை காரணம் காட்டி, 4,000 பயங்கரவாதிகளை, பட்டியலில் இருந்து மறைத்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கில், மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாடு முயற்சிக்கிறது' என, ஐ.நா., பொதுக்குழுவில், இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.



latest tamil news


'ஜம்மு -- காஷ்மீர் பிரச்னைக்கு, சர்வதேச அளவிலான சுமுக தீர்வு எட்டப்படவில்லை என்றால், தெற்காசியாவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படாது' என, பாக்., பிரதமர் இம்ரான் கான், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஐ.நா.,வுக்கான இந்திய செயலர் பவன் பாதே, கூறியிருப்பதாவது:ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள, பாக்., ஆக்கிரமிப்பு பகுதிகளில், பயங்கரவாத பயிற்சி முகாம்களை, அந்நாடு அதிகரித்துள்ளது.


latest tamil news


எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க, அனைத்து முயற்சிகளையும், பாக்., தீவிரப்படுத்தி வருகிறது.கொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள, 4,000 பயங்கரவாதிகளை பட்டியலில் இருந்து மறைத்து, அதன் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்த, பாக்., சதி திட்டம் தீட்டி வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-செப்-202017:09:09 IST Report Abuse
J.V. Iyer இந்தியா பாகிஸ்தானை ஒரு நாடாக மதிக்கக்கூடாது. பயங்கரவாதிகளின் உறைவிடம் ஒரு சுடுகாடு.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
29-செப்-202015:51:51 IST Report Abuse
M.COM.N.K.K. ஐநாவை இனி நம்பினால் இந்தியா பல துன்பங்களை சந்திக்க நேரிடும் நாம் நேரிடையாக பிரச்சனைக்குள்ள காஷ்மீர் பகுதிகளை வென்றெடுப்பதுதான் ஒரே வழி. இல்லை என்றால் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் வாதிடுவதுபோல் வாதித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் பாகிஸ்தான் பொய்களை சொல்வதும் அதற்கு இந்தியா தக்கபதிலடி இதையே பலவருடங்களாக கேட்டு கேட்டு போங்க...
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29-செப்-202009:41:33 IST Report Abuse
NicoleThomson பாக் என்பதே ஸ்ஓம்பிக்களின் தேசம் ஆகா மாறிவிட்டது அதனுடன் இந்தியாவிலும் சில ஸோம்பிக்கள் உருவாகி உள்ளனர் அவர்களின் தலையாய பணி மோடி எதிர்ப்பு என்று காட்டி ஆனால் இந்திய எதிர்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X