நான் மது குடிப்பதில்லை! அனில் அம்பானி வாக்குமூலம்

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன் : ''நான் மது அருந்துவதில்லை,'' என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, 61, தெரிவித்துள்ளார்.பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இக்கடனுக்காக, அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, சீன வங்கிகள், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு
Reliance Communications, Chairman, Anil Ambani

லண்டன் : ''நான் மது அருந்துவதில்லை,'' என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, 61, தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இக்கடனுக்காக, அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, சீன வங்கிகள், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

சமீபத்தில், இவ்வழக்கின் குறுக்கு விசாரணை நடந்தது; அப்போது, அனில் அம்பானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அளித்த வாக்குமூலம்: என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த ஓவியங்கள், என் மனைவிக்கு சொந்தமானவை. ஆடம்பர படகு, என் குடும்பத்தைச் சேர்ந்தது.


latest tamil newsஎனக்கு, கடல் காற்று அலர்ஜி. அதனால், நான் படகில் செல்வதில்லை. நான் தனிப்பட்ட உத்தரவாதம் எதையும், யாருக்கும் அளிக்கவில்லை.என் தாயிடம், 525 கோடி ரூபாய் ; மகனிடம், 300 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளேன். என் பெயரில் உள்ள, 'கிரெடிட் கார்டுகள்' வாயிலாக, என் தாயார் ஆடம்பரப் பொருட்களை வாங்கியதற்கு, நான் பொறுப்பாக முடியாது.

ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில், நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றன. அதில் உண்மையில்லை. நான், மிக எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ஓடுவது எனக்கு பிடிக்கும். எனக்கு மது அருந்தும் பழக்கமில்லை. புகை பிடிப்பதில்லை. ஆன்மிகத்தை பின்பற்றி, சைவ உணவு உண்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை; தவறானவை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Peter Durairaj - Subang Jaya,மலேஷியா
29-செப்-202012:41:10 IST Report Abuse
Peter Durairaj இவரைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
29-செப்-202010:59:46 IST Report Abuse
mindum vasantham ivar meethu 5100 kodi kadan ullathu இவர் செய்தது தவறான தொழில் cmda எனப்படும் மொபைல் தொழில்நுட்பத்தை கொண்ட மொபைல் நிறுவனம் வைத்திருந்தார் , இந்த தொழில் நுட்பத்தில் சிம் கார்டு மாத்த முடியாது கம்பெனி கொடுக்கும் மொபைல் மட்டுமே வைத்திருக்க முடியும் inbuilt simcard மட்டுமே இந்த நிறுவனம் படுதோல்வி அடைந்தது இதே இவர் அன்னான் ஜிவ் திட்டம் வெற்றி
Rate this:
Cancel
29-செப்-202007:57:53 IST Report Abuse
ஆரூர் ரங் தொழில் தோல்வி சகஜம். அரசு வங்கிகளில் (வாராக் ) கடன்பெற காங்கிரஸ் ஆட்களுக்குக் கொடுத்த விவரங்களை மட்டுமாவது ஒப்புதல் வாக்குமூலம் அளியுங்கள்😩. மும்பை மெட்ரோ கட்டுமான காண்டிராக்ட் ஓசியில் கொடுத்திருக்கமாடாங்க.
Rate this:
29-செப்-202016:53:01 IST Report Abuse
தமிழ் டேய் சொம்பு கொஞ்சம் பேசாமல் இரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X