தமிழ்நாடு

கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு

Added : செப் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை : மதுரையில் ஊராட்சிகளில் கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பான செலவு விவரங்களை அக்.,2 காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்களில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால நடவடிக்கை எடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தியது. இதற்காக
கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு

மதுரை : மதுரையில் ஊராட்சிகளில் கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பான செலவு விவரங்களை அக்.,2 காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்களில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி போர்க்கால நடவடிக்கை எடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தியது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இரண்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில் அக்.,2 மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி இதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வினய் சிறப்பு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. மாவட்ட செயலாளர் ராம்குமார் கூறுகையில், ''மக்கள் முன்னிலையில் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினம் விவரங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, நடந்த திட்டங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிட வேண்டும். துண்டு பிரசுரம் மற்றும் தண்டோரா மூலம் கூட்டம் நடப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202013:09:07 IST Report Abuse
பாமரன் அடப்போங்கப்பா... மத்திய அரசே நிதியை முறைகேடாக பயன்படுத்தி அரசியல் செய்யறதா CAG கூட சொல்லுது... ஏதாவது பண்ண முடிஞ்சதா...🙄🙄
Rate this:
Cancel
29-செப்-202009:49:16 IST Report Abuse
ருத்ரா முறைகேடு பணத்திற்கு பார்டர். முறைகேடு தான் செய்பவர்கள்என்றால் நம் காந்தி படம் போடாத நோட்டுக்களை பெறலாமே. கோடிக்கணக்கில் மத்திய அரசு பணம்தரவேண்டும் என்றால் முறைகேடாய் எடுத்த பணத்தை ,நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-செப்-202008:01:31 IST Report Abuse
Bhaskaran சுடலை சொன்னதுபோல் அரசு அதிகாரிகள் பலர் கொரநா கோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X