ஒசாமா கொலையால் அமெரிக்கா உறவு பாதிக்கும்: பாக்., மக்கள் கருத்து

Added : ஜூன் 22, 2011
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதால், ஏற்கனவே பதட்டத்தில் உள்ள பாகிஸ்தான்- அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்று, அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.


பாகிஸ்தானில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், கடந்த மே 2ம் தேதி அமெரிக்காவின், "சீல்' படையால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, அந்நாட்டின் பியூ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாவது: பாகிஸ்தானில் ஒசாமாவை சுட்டுக் கொன்றது தீய செயல் என்று, பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.14 சதவீதம் பேர், அமெரிக்காவின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். ஏற்கனவே, அமெரிக்கா - பாக்., இடையே பதட்டம் நிலவி வரும்போது, அமெரிக்காவின் இச்செயல், இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பாதித்துள்ளது. உலக விவகாரங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமா நல்ல செயல்களையே செய்வார் என்று, வெறும் எட்டு சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீதான நம்பிக்கையை விட, ஒபாமா மீது குறைந்த நம்பிக்கையையே வைத்துள்ளனர். அல் - குவைதா பயங்கரவாத அமைப்பிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் மக்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு சிறிது ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒசாமாவை அமெரிக்கா சுட்டுக் கொன்றது தொடர்பாக, பாகிஸ்தானின் நடவடிக்கை பற்றி தங்களுக்குத் தெரியாது என்று, 49 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒசாமா மறைந்திருந்தது அரசுக்குத் தெரியும் என்று, 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X