பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
TNCoronaUpdates,TNHealth,TNFightsCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu,Covid19,lockdown

சென்னை : தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என மாவட்ட கலெக்டர்கள் முதல்வர் பழனிசாமி இன்று(செப்.,29) ஆலோசனை நடத்தி வருகிறார். மதியம் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் பொது ஊரடங்கு செப்., 30ம் தேதி வரை அமலில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளம் போன்றவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில் 50 பேர்; இறுதி சடங்கில் 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பது உட்பட சில கட்டுப்பாடுகளும் உள்ளன.


latest tamil news



சில மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது. எனவே பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 10:00 மணிக்கு தலைமை செயலகத்தில்'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

மதியம் 3:00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
29-செப்-202013:57:27 IST Report Abuse
M.COM.N.K.K. அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்யவேண்டும். தனிப்பட்ட நபர் முடிவு செய்யமுடியாது.
Rate this:
Cancel
Karthik - india,இந்தியா
29-செப்-202011:04:19 IST Report Abuse
Karthik மக்களின் நிரந்தர முதல்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X