எல்லையில் எதனையும் எதிர்கொள்ள தயார்: விமானப்படை தளபதி பதாரியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லையில் எதனையும் எதிர்கொள்ள தயார்: விமானப்படை தளபதி பதாரியா

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (2)
Share
துடில்லி: எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.இந்திய -- சீன இடையே, மே மாதம் முதல், எல்லையில் மோதல் நிலவி வருகிறது. கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்கள் இடையே, ஜூன், 15ல், மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு வீரர்களும், கைகளால் ஒருவரை
IAF_Chief, Ladakh, Standoff, IndianForces, Prepared, AnyEventuality, விமானப்படை தளபதி, பதாரியா, லடாக், எல்லை, பிரச்னை

துடில்லி: எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

இந்திய -- சீன இடையே, மே மாதம் முதல், எல்லையில் மோதல் நிலவி வருகிறது. கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்கள் இடையே, ஜூன், 15ல், மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு வீரர்களும், கைகளால் ஒருவரை ஒருவர், கடுமையாக தாக்கிக் கொண்டனர். சீன வீரர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில், நம் தரப்பில், 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில், பலியானவர்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும் சீன ராணுவத்தினர் அவ்வப்போது எல்லையில் அத்துமீறுவது தொடர்கிறது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் இந்திய - சீன எல்லை நிலைமை குறித்து இந்தியா விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பேசியதாவது: எங்கள் வடக்கு எல்லைகளில் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையானது போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக இருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் ஏற்படும் மோதலில் வெற்றி பெறுவதில், விமானப் படை முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X