வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு:சோனியாவுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என அக்கட்சி தலைவர் சோனியா கூறியுள்ளதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், விவசாய மார்க்கெட் கமிட்டி சட்டம்(ஏபிஎம்சி) நீக்கப்படும் என கூறப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.மத்திய
BJP,Congress,Nirmala,Nirmala Sitharaman, காங்கிரஸ், நிர்மலா, நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என அக்கட்சி தலைவர் சோனியா கூறியுள்ளதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், விவசாய மார்க்கெட் கமிட்டி சட்டம்(ஏபிஎம்சி) நீக்கப்படும் என கூறப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறது.


latest tamil news
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா அளித்த அறிவுரையில், அரசியல்சாசன சட்டம் 252(2)ன்படி, விவசாய சட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். இந்த சட்டத்தின் மூலம், மத்திய அரசின் சட்டத்தை மாநிலங்கள் மறுக்க முடியும். இதனால், விவசாய சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக உள்ள குறைந்தபட்ச ஆதார விலை நீக்கம், ஏபிஎம்சி நீக்கம் ஆகியவற்றை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுக்க முடியும். விவசாயிகளுக்கு பா.ஜ.,வும் மோடி அரசும் இழைத்துள்ள அநீதிக்கு ஆறுதலாக அமையும் எனக்கூறியிருந்தார்.


latest tamil news
இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஏபிஎம்சி சட்டத்தை நீக்குவதடன், விவசாய பொருட்களை வர்த்தகம் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதியை அளித்ததா ? அல்லது தற்போது மத்திய அரசின் சட்டத்தை மீறி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற சொல்லி மக்களை தூண்டி விடுகிறதா? காங்கிரஸ் தலைவருக்கு அறிவுரை கூறுவோரை நினைத்து ஆச்சர்யமடைகிறேன்'' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rameshkumar natarajan - kochi,இந்தியா
30-செப்-202009:28:01 IST Report Abuse
rameshkumar natarajan Agriculture is state subject, how a central Government can a law? Forget Congress and DMK, answer the farmers who are protesting. Many who are making comments are writing about Srilanka and all. Forget about srilanka tamils, lets concentrate about tamil in tamil nadu. Why central government is not agreeing to put a clause in the act that Minimum procurement price will be paid? What Congress says is correct only.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
30-செப்-202006:32:11 IST Report Abuse
ravi உண்மையான விவசாயி விவசாயத்திற்கு உறுதுணையா இருக்கும் டிராக்டர் போன்ற வாகனங்களை தெய்வமாய் வணங்குவான். திருட்டு காசுக்காக போராட்டம் செய்பவர்கள் தான் இந்தவேலையை செய்வார்கள். அதுவும் குறிப்பாக பாக்கிஸ்தான் சீனா போன்ற நாடுகளுக்கான வக்காலத்து வாங்கி வேலை பார்க்கும் கான்-கிராஸ் திமுக கம்யூனிஸ்ட்ஸ் கட்சிகள் தான் இந்த புதிய வேளாண் சீர்திருத்தத்துக்கு எதிராக போராடுகின்றன.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-செப்-202006:29:29 IST Report Abuse
RajanRajan நாடு நலன் கருதி சட்ட கட்டமைப்புகளுக்குள் பணியாற்ற வேண்டிய எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அரசியல் பண்ணி ஈழத்தமிழர் படுகொலை வரை அரங்கேற்றிய கொலைகார கொள்ளைக்கார கும்பல் இந்த காங்கிரஸ். தேசிய நலன் மக்கள் நலன் கருதி இந்த கும்பலை அடியோடு ஒழித்து கட்டுவது தான் இங்கு ஒரே தீர்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X