இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 73% கொரோனா நோயாளிகள் மீட்பு

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் மஹாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் இருந்து, கொரோனாவிலிருந்து 73 சதவீதம் பேர் மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவிக்கிறது.



latest tamil news




இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரதுறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் புதிதாக கொரோனாவில் இருந்து மீட்கப்பட்கப்பட்ட நோயாளிகளில் 73 சதவீதம் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், டில்லி, ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 70,589 பேர் பாதிக்கப் பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 61,45,291 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 73 சதவீதம் இதே பத்து மாநிலங்களில் இருந்து தான் பதிவாகின. அதன்படி, கொரோனா தொற்றுக்கு அதிகபட்சமாக 11,000 பாதிப்பு களுடன் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், தொடர்ந்து 6000 பாதிப்புகளுடன் கர்நாடகாவும் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா காரணமாக 776 பேர் பலியாகினர். அத்துடன் இந்த 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 78 சதவீதம் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 96,318 ஆக உள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 180 பேர் மற்றும் தமிழ்நாட்டில் 70 பேர் பலியாகினர்.


latest tamil news



இந்தியாவில் கொரோனாவில் இருந்து நேற்று 84,877 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டி, 51,01,397 ஆக உள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதத்தை 83 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியுள்ளது. சராசரி கொரோனா மீட்பு விகிதம் 83.01 சதவீதமாகும். நேற்று கொரோனா மீட்பு விகிதள் 82.58 சதவீதமாக இருந்தது. இது சிகிச்சையில் உள்ளவர்களை விட 41.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. மீட்கப்பட்ட நோயாளிகள், சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் 5.38 மடங்காகும் என மத்திய சுகாதாரதுறை இன்று (செப்.,29) தெரிவித்தது. தற்போது 9,47,576 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த விகிதத்தில் 15.42 சதவீதமாக உள்ளது.

புதிய கொரோனா பாதிப்புகளை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா நோய் பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் (ஒரே நாளில்) அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 20,000 பேர் மீட்கப்பட்டனர். இதனால் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 7000 பேர் வரை தொற்றில்இருந்து மீட்கப்பட்டனர். தொடர்ச்சியான கொரோனா மீட்டெடுப்புகள், சிகிச்சையில் உள்ள நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட நோயாளிகளுக்கான இடையிலான இடைவெளியை மேலும் விரிவாக்க வழிவகுத்தன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X