பொது செய்தி

இந்தியா

90 நாட்களில் 350 ஆன்லைன் கோர்சுகள் : கேரள மாணவி உலக சாதனை

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

திருவனந்தபுரம்: ஊரடங்கு கால கட்டத்தில் 90 நாட்களில் 350 ஆன்லைன் கோர்சுகளை படித்து உலக சாதனை படைத்துள்ளார் கேளர கல்லூரி மாணவி ஒருவர்



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலமக்காரா வை சேர்ந்தவர். ஆரத்தி ரெகுநாத். இவர் கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி., உயிர் வேதியியலில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட போராடி வந்த வேளையில் இவர் கடந்த 90 நாட்களில் 350 ஆன்லைன் கோர்சுகளை படித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஆன்லைனில் பலதரப்பட்ட படிப்புகள் உள்ளன. எனக்கு எனது கல்லூரி ஆசிரியர்கள் தான் அறிமுகப்படுத்தினர். ஆன்லைன் படிப்புகள் கால அளவிலும் பாடத்திட்டத்திலும் வேறுபடுகின்றன. கல்லூரி முதல்வர் அஜிம்ஸ் பி. முகம்மது. ஒருங்கிணைப்பாளர் ஹனீபா, மற்றும் வகுப்பு ஆசிரியர் நீலிமா ஆகியோர் ஆதரவு அளித்தனர். என கூறினார்.


latest tamil news




ஆரத்திரெகுநாத் ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வர்ஜீனியா பல்கலைக்கழகம், நியூயார்க் மாநில பல்கலைக்கழகம், கொலராடோ போல்டர் ,கோபன்ஹேகன் ,ரோசெஸ்டர் ,எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைகழங்கள் வழங்கும் ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Coimbatore,இந்தியா
30-செப்-202010:28:25 IST Report Abuse
Kannan இது விளம்பரத்திற்காக. நிச்சயமாக இதனை கோர்ஸ் படிக்க இயலாது. படித்தாலும் பிரயோஜனம் இல்லை. இதை படித்தவுடன் பல பேர் குழந்தைகளை பல கோர்ஸ் படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவர்.
Rate this:
Cancel
Michael Coolas - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
30-செப்-202010:21:47 IST Report Abuse
Michael Coolas மிக சிறப்பு
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-செப்-202007:54:16 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இப்போது நிறைய ஆன்லைன் கோர்ஸ் உள்ளன. பாதிக்குமேல் டுபாக்கூர். இவர் இதுபோன்று எதிலாவது சேர்ந்திருப்பர். இருப்பினும் முயற்சி பாராட்டத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X