ஒன்பது மாதங்களில் கொரோனாவுக்கு 10 லட்சம் பேர் பலி

Updated : செப் 29, 2020 | Added : செப் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன் : கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகெங்கும் பலியானோர் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது.அமெரிக்காவில் மட்டுமே, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிக பலியானோர் பட்டியலில், 95 ஆயிரம் பேருடன், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.ஆசிய நாடான சீனாவின் வூஹான் நகரில், கடந்தாண்டு இறுதியில், கொரோனா வைரஸ் பாதிப்புடன் பலர் மருத்துவமனையில்
கொரோனாவால் ஒன்பது மாதங்களில் பலியானோர்...10 லட்சம் பேர்!

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகெங்கும் பலியானோர் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டுமே, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிக பலியானோர் பட்டியலில், 95 ஆயிரம் பேருடன், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.ஆசிய நாடான சீனாவின் வூஹான் நகரில், கடந்தாண்டு இறுதியில், கொரோனா வைரஸ் பாதிப்புடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்தாண்டு ஜன., 11ல், முதல் பலி பதிவானது. அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின் தான், வூஹான் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.
மூன்றாம் இடம்அங்கிருந்து வெளியேறவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. அதற்குள், இந்த வைரஸ் சீனாவின் பல்வேறு பகுதி களுக்கும், உலகெங்கும் பரவத் துவங்கிவிட்டது.தற்போது உலகெங்கும், 3.35 கோடி பேருக்கு, இந்த தொற்று உறுதியாகி உள்ளது. அதில், பலியானோர் எண்ணிக்கை, 10 லட்சத்து, ஆறாயிரத்து, 831 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும், 2.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் உயிரிழந்த ஐந்து பேரில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

மொத்தம், 1.42 லட்சம் பேருடன், தென் அமெரிக்க நாடான பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா, 95 ஆயிரம் பேருடன், அதிக பலியானோர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மெக்சிகோ, 76 ஆயிரம் பேருடன், நான்காவது இடத்தில் உள்ளது.கடந்த, 2004ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோர் எண்ணிக்கையை விட, நான்கு மடங்கு அதிகமானோர், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக, பல சிறிய நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமானோரை, கடந்த, ஒன்பது மாதங்களில் இழந்துஉள்ளோம்.


பரிசோதனைஇந்த எண்ணிக்கையும் முழுமையானதாக, சரியானதாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.பல நாடுகளில் சரியான முறையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை, கணக்குகளில் தவறு உள்ளதாக சர்ச்சை உள்ளது.தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு, ஐந்தாயிரம் பேர் இந்த வைரசால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், முழுதும் பாதுகாப்பான தடுப்பூசி, அடுத்தாண்டின் முதல் காலாண்டில் தான் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 1919ல் உலகை அச்சுறுத்திய, 'ஸ்பானிஷ் புளூ' வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில், தற்போதைய பாதிப்பு குறைவு தான்.


பாதுகாப்புஅப்போது, ஐந்து கோடி பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும், 6.75 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர், இரண்டாவது அலையின் போது உயிரிழந்தவர்கள்.'ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை துவங்கியுள்ளது. அமெரிக்காவில், விரைவில் இரண்டாம் அலை துவங்கும்' என, நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது:கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தடுப்பூசி, மருந்து இல்லாத நிலையில், முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமே, அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கமுடியும்.மிக குறுகிய காலத்தில், 10 லட்சம் உயிரைப் பறித்துள்ளது. எய்ட்ஸ் நோயால் ஒரு ஆண்டில் ஏற்படும் உயிரிழப்பைவிட அதிகமான பலி ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, உலகெங்கும், 6.90 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பலியாயினர்.தற்போது பல நாடுகளில் இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. உண்மையில் தற்போது தான், இந்த வைரசின் பாதிப்பு துவங்கியுள்ளது.

இதுவரை சந்தித்தது எல்லாம் அதன் முன்னோட்டம் தான். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


பரிசோதனைக்கு புதிய கருவிமிகவும் குறைந்த செலவில், அதே நேரத்தில் வேகமாக, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான கருவியை இந்தியா உருவாக்கிஉள்ளது.சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், அணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் மற்றும் டாடா குழுமம் இணைந்து மேற்கொண்ட முயற்சியில், புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு, 'பெலுடா' என பெயரிடப்பட்டுஉள்ளது. பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே படத்தில் வரும் துப்பறிவாளரின் பெயரான, பெலுடா, இந்த கருவிக்கு வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்த அமைப்புகள் கூறியுள்ளதாவது:தற்போது பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை செய்வதற்கு, 1,600 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், புதிய கருவியில், 500 ரூபாய் செலவில் பரிசோதனை செய்து கொள்ளலாம். கர்ப்பம் ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பது போல், ஒரு சிறிய கருவி தான், பெலுடா. அதனால், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், கொரோனா பரிசோதனையை செய்ய முடியும். மேலும், 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு, அந்த அமைப்புகள் கூறியுள்ளன.


எப்போது தீர்வு!பத்து லட்சம் என்பது, மிகுந்த சோகத்தை ஏற்படுத்தும் எண்ணிக்கையாக உள்ளது. நம் உறவுகள், நண்பர்களை இழந்துள்ளோம். அவர்களுக்கு இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாதது, வேதனையை அதிகரிக்க வைக்கிறது. அனைவருக்கும் உகந்த விலையில் கிடைக்கும் தடுப்பூசிகள், விரைவில்பயன்பாட்டுக்கு வர வேண்டும்.அன்டோனியோ குட்டெரஸ்பொதுச் செயலர், ஐ.நா.,

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-செப்-202005:56:31 IST Report Abuse
NicoleThomson சீனாவின் பங்கு
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-செப்-202004:26:30 IST Report Abuse
blocked user கொள்ளை நோய் வந்தால் இதுதான் பிரச்சினை. இதற்க்கு உடனடி தீர்வு கிடையாது. உணவு எங்கள் உரிமை... எதை வேண்டுமானாலும் கொன்று தின்போம் என்றால் இதுதான் நடக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X