சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 29, 2020
Share
Advertisement
நிலவில் கதிர்வீச்சுஉலகில் முதன்முறையாக அமெரிக்காவின் நாசா 1969ல் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி சாதித்தது. 2024ல் நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் நிலவும் கதிர்வீச்சின் அளவை விட, நிலவில் 2-3 மடங்கு அதிகமான கதிர்வீச்சு

நிலவில் கதிர்வீச்சு

உலகில் முதன்முறையாக அமெரிக்காவின் நாசா 1969ல் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி சாதித்தது. 2024ல் நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் நிலவும் கதிர்வீச்சின் அளவை விட, நிலவில் 2-3 மடங்கு அதிகமான கதிர்வீச்சு இருப்பதாக சீனா-ஜெர்மன் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. சீனா 2019ல் நிலவுக்கு அனுப்பிய 'சாங்-இ4' விண்கல ஆய்வின் படி இதனை தெரிவித்துள்ளது.


தகவல் சுரங்கம்




வயது தடையில்லை



அதிக வயதில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தவர் ஜப்பானின் யுஷிரோ மியூரா. 2003ல் தன் 70 வயதில் எவரெஸ்டில் ஏறி சாதித்தார். 2006, 2007 என இரண்டு முறை இருதய ஆப்பரேஷன் செய்து கொண்டவர். இதன் பின் 2013 மே 23ல் 80 வயதில் மீண்டும் எவரெஸ்டில் ஏறி, தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. இவர் 'கனவுகளை ஒருபோது விட்டுக்கொடுக்காதீர், தொடர்ந்து முயன்றால் நிச்சயம் கனவு நிறைவேறும்' என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X