எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ராஜினாமா செய்ய முடிவு: பன்னீர் நிபந்தனைகள் என்ன?

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னையில், நேற்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் கூட்டம் நடந்தது. அதில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்காமல், தன் சொந்த மாவட்டமான தேனிக்கு செல்ல தயாரானார். வழக்கமாக, விமானம் வாயிலாக மதுரை சென்று, அங்கிருந்து தேனிக்கு செல்வார். ஆனால், நேற்று காலையில், அரசு காரில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழற்றி விட்டு,
ராஜினாமா செய்ய, முடிவு, பன்னீர் செல்வம், நிபந்தனைகள்

சென்னையில், நேற்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் கூட்டம் நடந்தது. அதில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்காமல், தன் சொந்த மாவட்டமான தேனிக்கு செல்ல தயாரானார்.

வழக்கமாக, விமானம் வாயிலாக மதுரை சென்று, அங்கிருந்து தேனிக்கு செல்வார். ஆனால், நேற்று காலையில், அரசு காரில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழற்றி விட்டு, தனக்கு சொந்தமான, 'ரேஞ்ச் ரோவர்' காரில், அ.தி.மு.க., கொடி கட்டி, புறப்பட தயாரானார்.
இந்த தகவல், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கத்திற்கு தெரிய வந்ததும், அவர்கள் உடனே, ஓ.பி.எஸ்., வீட்டிற்குச் சென்றனர். அவரை சமாதானப்படுத்தி, சொந்த ஊர் செல்லும் முடிவை தடுத்தனர்.


இச்சந்திப்பில் விதித்த நிபந்தனைகள் குறித்து, ஓ.பி.எஸ்., ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:*கட்சியின் வழிகாட்டுதல் குழுவுக்கு, 11 பேரை நியமிக்க வேண்டும் என்ற, அறிவிப்புக்கு மட்டும் தான் கையெழுத்து போடுவேன். அதுவரையில், மற்ற எந்த ஒரு அறிவிப்புக்கும், நான் கையெழுத்து போட மாட்டேன்

*இரண்டாக பிளவுபட்ட கட்சி, மீண்டும் ஒன்றிணைந்த போது, 'வரும், ௨௦௨௧ல், நீங்கள் முதல்வர் வேட்பாளராக இருங்கள். தற்போது, முதல்வர் இ.பி.எஸ்., நீடிக்கட்டும்' என்ற உத்தரவாதத்தை, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் அளித்தனர்; அதை நிறைவேற்ற வேண்டும்

*சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும், அ.தி.மு.க.,வில் சேர்க்கக் கூடாது என்ற உத்தரவாதத்துடன் தான், இணைவதற்கு சம்மதித்தேன். இனியும், அவர்களை சேர்க்க மாட்டோம் என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவிக்க வேண்டும்.

*முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் தான் இருக்க வேண்டும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது கூடாது. இதற்கு சம்மதிக்கவில்லை என்றால், இரட்டை இலை சின்னத்தை மட்டும் மையப்படுத்தி, தேர்தலை சந்திப்போம்.

*தேர்தல் முடிவுக்கு பின், முதல்வரை தேர்வு செய்யலாம். அதுவரையில், இரட்டை தலைமை நீடிக்கட்டும். இதற்கும் சம்மதம் இல்லை என்றால், வன்னியர் சமுதாயத்தினருக்கு, முதல்வர் பதவியும், துணை முதல்வர் பதவியை, சிறுபான்மையின சமுதாயத்திற்கு கொடுக்கலாம்.

*இந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால், துணை முதல்வர் பதவியை, நான் ராஜினாமா செய்து விட்டு, கட்சி ஒருங்கிணைப்பாளராக மட்டும் இருக்கிறேன். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
30-செப்-202021:36:28 IST Report Abuse
sankaseshan பன்னீரின் கோரிக்கை நியாயமாக உள்ளது .
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
30-செப்-202018:34:58 IST Report Abuse
rsudarsan lic குரு பெயர்ச்ச்சி நவம்பர் முடிவில் சனி பெயர்ச்சி டிசம்பர் முடிவில் l கொரோன ஆண்டும் முடிகிறது. நல்ல காலம் பிறக்கிறது. எட்டு கோடி தமிழர்களும் சிந்தித்தால் எல்லா பிரச்னைகளில் இருந்தும் வெளியே வரலாம்
Rate this:
Cancel
30-செப்-202017:55:52 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) OPS EPSஸ்டாலின் மூவரும் ஊழல் தலைகள் தான் முவரும் வேண்டாம் . புதியவர் வரட்டும் மக்கள் ஆதரவோடு வெல்லட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X