கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர்.latest tamil newsஅமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. காட்டுத்தீயால் எண்ணற்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அதிகமாக வீசும் காற்றால் தீ வேகமாக பரவுகிறது. காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் வனப் பகுதிகளில் ஆக. மாதத்தில் பரவ துவங்கிய காட்டுத் தீ இம்மாதம் துவக்கம் வரை நீடித்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலைகள் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் 24 பேர் பலியாகினர். சில இடங்களில் இந்த தீ கட்டுக்குள் வராமல் அதிக சேதங்களை ஏற்படுத்துகிறது. இந்த தீ விபத்தால், மக்கள் உயிர் மட்டுமின்றி, விலங்குகள், அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள் உள்ளிட்டவையும் பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுத்தீ கலிபோர்னியாவின் நபா பள்ளத்தாக்கு பகுதியில் வேகமாக பரவி வருகிறது.


latest tamil newsகாட்டுத் தீ அணைக்கப்பட்டு இயல்பு வாழ்கை திரும்பிய நிலையில் வடக்கு கலிபோர்னியா நகரின் ஓயின் கன்ட்ரி பகுதியில் 27ம் தேதி முதல் மீண்டும் காட்டுத் தீ பரவத் துவங்கியுள்ளது.தீ வேகமாக பரவி வருவதால் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று பேர் பலியாகி விட்டனர்.தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மட்டும் கலிபோர்னியாவில் காட்டுத் தீக்கு 29 பேர் பலியாகி விட்டனர். 7,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-செப்-202013:20:48 IST Report Abuse
Ramesh Sargam கலிபோர்னியாவில் ஒரு பக்கம் காட்டு தீ. மறுபக்கம் corona virus. அவதிப்படும் மக்களை காப்பாற்ற முயலாமல், அதிபர் டிரம்ப் தேர்தல் எப்படி ஜெயித்து மீண்டும் எப்படி அதிபர் பதவியில் அமரலாம் என்கிற ஒரே குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X