நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (32)
Share
புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.,வின் 'சிறப்பு மனிதநேய விருது' வழங்கப்பட்டது.கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தன்னாலான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு
sonu sood, UN, award, United Nations, சோனு சூட், ஐநா, விருது

புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.,வின் 'சிறப்பு மனிதநேய விருது' வழங்கப்பட்டது.

கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தன்னாலான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியது; தமிழக மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து வர விமானம் ஏற்பாடு செய்து தந்தது; உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.


latest tamil news


இந்நிலையில், அவரது சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது' சோனு சூட்டுக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். இவ்விருதினை இதற்கு முன், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். தற்போது இந்த பிரபலங்களின் வரிசையில், சோனு சூட்டும் இணைந்துள்ளார்.

விருது பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்த சோனு சூட், 'எந்த எதிர்பார்ப்பும் இன்றி என் நாட்டு மக்களுக்கு உதவி செய்கிறேன். ஐ.நா., அளித்துள்ள இந்த அங்கீகாரம் சிறப்பு மிக்கது. அரிய மரியாதையை எனக்கு வழங்கி கவுரவித்துள்ளது' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X