இல்லாததைச் சொல்லி எம்பிகள் அமளியில் ஈடுபடுவதா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இல்லாததைச் சொல்லி எம்பிகள் அமளியில் ஈடுபடுவதா?

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (4)
Share
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்கள், பல்வேறு குழப்பங்கள் நிறைந்தவை. அவை சட்டமாக்கப்பட்ட விதம், பார்லிமென்ட் விதிமுறைகளுக்கு முரண்பட்டதாகும்; ஒளிவு மறைவற்ற சட்டங்களில்லை - தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்.'இல்லாததை எல்லாம் சொல்லி, மத்திய அரசுக்கு எதிராக, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டால், அரசு வேறு என்ன செய்யும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க.,
இல்லாததைச் சொல்லி எம்பிகள் அமளியில் ஈடுபடுவதா?

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்கள், பல்வேறு குழப்பங்கள் நிறைந்தவை. அவை சட்டமாக்கப்பட்ட விதம், பார்லிமென்ட் விதிமுறைகளுக்கு முரண்பட்டதாகும்; ஒளிவு மறைவற்ற சட்டங்களில்லை - தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்.


'இல்லாததை எல்லாம் சொல்லி, மத்திய அரசுக்கு எதிராக, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டால், அரசு வேறு என்ன செய்யும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேச்சு.



கரும்பு தொழிலை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், அதை சார்ந்து இருக்கக் கூடிய, உப தொழிலையும் அரசு கவனத்தில் கொண்டு, கரும்புக்கு லாபகரமான விலையை அறிவித்தாலும், ஊக்கத்தொகையை, டன் ஒன்றுக்கு, 300 ரூபாய் உயர்த்தி வழங்கினால் மட்டுமே, சர்க்கரை தொழிலும், கரும்பு தொழிலும், தமிழகத்தில் வளரும் - விருத்தகிரி.


'கரும்பு தொழில் வளருமா; தொழிற்சங்கங்கள் வளருமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின், தேசிய தலைவர் விருத்தகிரி பேச்சு.



மத்திய அரசு, விவசாயிகளுக்கான அரசு. இந்த அரசு விவசாயிகளுக்கு செய்தது போல், வேறு எந்த அரசும் செய்யவில்லை - பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை.


'ஆஹா... சொல்லவே இல்லை...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை பேச்சு.



விவசாய உற்பத்தி, வணிகம் போன்றவற்றையும், கார்ப்பரேட் மயமாக்குவதன் மூலம், விவசாய குடிகளுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கிறது - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.


latest tamil news





'நல்ல நேரத்திலேயே நாழி தண்ணீர் குடிப்பீங்க; இது, விவசாயிகள் பிரச்னை; சும்மா இருப்பீர்களா...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.



சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், அரசியலில் மாற்றம் வருமா என, என்னால் கூற முடியாது - அமைச்சர் உதயகுமார்.


'நாங்கள் மதில் மேல் பூனை; எப்படியும் மாறுவோம் என்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.



மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட, விவசாய முதலாளிகளையும், பண்ணையார்களையும் தான், தி.மு.க., திரட்டியிருக்க வேண்டுமே தவிர, விவசாய தொழிலாளர்களை வைத்து நாடகமாட தேவையில்லை - ஷியாம் கிருஷ்ணசாமி.


'நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், பெரிய முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்காரர்களுக்கும் தான், இந்த சட்டங்கள் எதிரானவை என்பது தெரிகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X